நாகை மாவட்டத்தில் நேற்று இரவு முதல் தொடர்ச்சியாக 16 மணி நேரம் மழை பெய்து கொண்டிருப்பதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலையில் உள்ளனர்
நாகை மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தாலும் தனியார் மற்றும் அரசு ஊழியர்கள் அலுவலகம் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அவர்கள் மிகுந்த சிரமத்துடன் அலுவலகம் சென்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளன.
மேலும் வாகனங்களும் மிகவும் மெதுவாக செல்வதால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக வேளாங்கண்ணியில் 17 சென்டிமீட்டர் மழை பாதிவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வேளாங்கண்ணியை அடுத்து திருவாரூர் மாவட்டம் நன்னிலம் என்ற பகுதிகளின் 12.3 சென்டிமீட்டர் மழையும் கடலூரில் 12 சென்டிமீட்டர் மழையும் பரங்கிப்பேட்டையில் 12 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.
சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதை அடுத்து மீட்பு நடவடிக்கைகளும் சுறுசுறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது