Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சிறுமியை கற்பழித்துவிட்டு 3 லட்சம் தருவதாக பேரம் பேசிய அயோக்கியன்

Advertiesment
சிறுமியை கற்பழித்துவிட்டு 3 லட்சம் தருவதாக பேரம் பேசிய அயோக்கியன்
, சனி, 19 மே 2018 (12:17 IST)
கிருஷ்ணகிரி அருகே 14 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய கொடூரன், அதற்கு நஷ்ட ஈடாக 3 லட்ச ரூபாய் கொடுப்பதாக கூறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூரை அடுத்த நத்தகயம் பகுதியை சேர்ந்தவன் ஆசைதம்பி(32). இவனுக்கு திருமணமாகி இவனது மனைவி 6 மாத கர்ப்பமாக உள்ளார்.
 
இந்நிலையில் ஆசைத்தம்பி அதேபகுதியை சேர்ந்த 14 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி கற்பழித்துள்ளான். இதனால் சிறுமி கர்ப்பமானார். இந்த விஷயம் சிறுமியின் பெற்றோருக்கு தெரியவரவே அவர்கள் அதிர்ந்துபோய் பஞ்சாயத்தைக் கூட்டினர்.
 
பேச்சுவார்த்தைக்கு வந்த ஆசைத்தம்பி, சிறுமியை கற்பழித்ததற்கு 3 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு தருவதாகவும், இதனை பெற்றுக்கொண்டு சிறுமியின் கருவை கலைக்குமாறு கூறியுள்ளான். இதனால் அங்கிருந்தவர்கள் கடும் கோபமடைந்து, சின்னசாமியை சரமாரியாக தாக்கினர். 
webdunia
இதையடுத்து சிறுமியின் பெற்றோர் பர்கூர் மகளிர் காவல் நிலையத்தில்  புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் சின்னசாமி மீது வழக்கு பதிந்துள்ள போலீஸார், அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரசிகரின் மறைவிற்கு போஸ்டர் ஒட்டிய சிம்பு - வைரல் புகைப்படங்கள்