தமிழகத்தின் 14 மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக தமிழக கடலோர மாவட்டங்களில் அடுத்து வரும் நாட்களுக்கு கனமழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் தமிழகத்தின் 14 மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், மதுரை, விருதுநகர், சிவகங்கை, செங்கல்பட்டு, விழுப்புரம், காஞ்சீபுரம், திருவள்ளூர், சென்னை ஆகிய மாவட்டங்களில் கனமழையும், அனேக இடங்களில் மிதமான மழையும் பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.