Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

13 வயது தங்கையை கர்ப்பமாக்கிய அண்ணன்!

13 வயது தங்கையை கர்ப்பமாக்கிய அண்ணன்!

Advertiesment
13 வயது தங்கையை கர்ப்பமாக்கிய அண்ணன்!
, வியாழன், 1 ஜூன் 2017 (15:54 IST)
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே 13 வயதான சிறுமியை அவரது அண்ணனே பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 
 
ஓமலூர் அருகே உள்ள கே.ஆர்.தோப்பூரை சேர்ந்தவர் ராஜசேகரன். பட்டதாரியான இவர் வேலையில்லாமல் வீட்டில் இருந்துவந்துள்ளார். இந்நிலையில் கடந்த வருடம் இவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர்.
 
இந்நிலையில் இவர் தனது சித்தப்பா வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். அங்கு தனது சித்தப்பாவின் 13 வயது மகளை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். தனக்கு தங்கை முறையில் உள்ள அந்த சிறுமியுடன் ராஜசேகரன் வீட்டில் யாருக்கும் தெரியாமல் தொடர்ந்து வலுக்கட்டாயமாக உடலுறவு செய்து வந்துள்ளார்.
 
இந்நிலையில் சிறுமிக்கு வயிற்றில் வலி ஏற்பட அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அப்போது சிறுமி கர்ப்பமாக இருக்கும் சம்பவம் பெற்றோர்களுக்கு தெரியவர அவர்கள் அதிர்ந்துபோய் விட்டனர். இதனையடுத்து ராஜசேகரன் தான் இதற்கு காரணம் என தெரியவந்ததை அடுத்து அவர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட ராஜசேகரனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டிடிவி தினகரனுக்கு ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்...