Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

13 வயது சிறுமியை 400 பேர் பலாத்காரம்: சென்னையில் ஒரு கொடூர சம்பவம்!

Advertiesment
13 வயது சிறுமியை 400 பேர் பலாத்காரம்: சென்னையில் ஒரு கொடூர சம்பவம்!
, ஞாயிறு, 29 நவம்பர் 2020 (12:43 IST)
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது என்பதை அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கும் செய்தியைப் பார்த்து வருகிறோம். குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை அடுத்து தற்போது போஸ்கோ உள்ளிட்ட கடுமையான சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது  
 
சட்டங்கள் கடுமையாகப்பட்டாலும் பெண் குழந்தைகளின் மீதான பாலியல் கொடூரம் பலாத்காரம் அதிகரித்துக் கொண்டே வருகிறது என்பதுதான் புள்ளிவிவரங்களின் கணக்காக உள்ளது  
 
இந்த நிலையில் சென்னை வண்ணாரப்பேட்டையில் 13 வயது சிறுமியை 400 பேர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளிவந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததில் பாஜக பிரமுகர், காவல் ஆய்வாளர், அரசு அதிகாரிகள் உள்பட பலருக்கும் தொடர்பு இருப்பதாகவும் இவர்களில் 15 பேர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது
 
13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவர்களின் பட்டியலை 5 காவல் ஆய்வாளர்கள் தயாரித்து வருவதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன   
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஜய் மக்கள் இயக்கம் பெயரில் புது யூட்யூப் சேனல்; எல்லா அறிவிப்பும் இங்கேதான்!