Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே குடும்பத்தை சேர்ந்த 13 பேர்களுக்கு கொரோனா தொற்று: சென்னையில் பரபரப்பு!

Webdunia
ஞாயிறு, 3 மே 2020 (07:31 IST)
கடந்த இரண்டு நாட்களாக சென்னையில் மட்டும் 100க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் சென்னை ராயப்பேட்டை பகுதியில் வசித்து வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது,. 
 
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 231 பேர்களும், சென்னையில் 174 பேர்களும் புதிதாக கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ள சென்னையில் ஆங்காங்கே கொரோனா பாதிப்பு மிக் அதிகமாகி வருகிறது. குறிப்பாக கோயம்பேடு மார்க்கெட் பகுதியால் கொரோனா தொற்று சென்னையில் மிக வேகமாக பரவி வருகிறது.
 
இந்த நிலையில் சென்னை ராயப்பேட்டையில் வசித்து வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 13 பேர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர்கள் 13 பேர்களும் சென்னை நுங்கம்பாக்கம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 
 
இதேபோல் சென்னை ஆதம்பாக்கம் பகுதியிலும் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளதை அடுத்து மூவரும் கொரோனா தனி வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மூன்று பேரும் 60வயதிற்கு மேற்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாறி மாறி வாழ்த்து தெரிவித்த ஸ்டாலின் - ஈபிஎஸ்.. யார் பக்கம் போவார் டாக்டர் ராமதாஸ்?

12வது மாடியில் இருந்து விழுந்த 4 வயது குழந்தை பரிதாப மரணம்.. தாயின் கவனக்குறைவால் சோகம்..!

இன்றிரவு கொட்டப்போகுது கனமழை.. 20 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

ஹைட்ரஜனில் இயங்கும் முதல் ரயில்.. சென்னை ஐசிஎப் சோதனை வெற்றி..!

திருமணம் செய்ய மறுத்ததால் ஆத்திரம்.. காதலர் வீட்டின் முன் தீக்குளித்த பெண் காவலர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments