Webdunia - Bharat's app for daily news and videos

Install App

12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி மாற்றம்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

Webdunia
புதன், 26 ஏப்ரல் 2023 (11:09 IST)
12ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் மே 5ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அந்த தேதி மாற்றப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த விடைத்தாள்கள் தற்போது திருத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் மே 5ஆம் தேதி 12ஆம் வகுப்பு தேர்வுகள் நடைபெறும் என்று கூறப்பட்டிருந்த நிலையில் மே 7ஆம் தேதி நீட் தேர்வு நடைபெறுவதால் அதற்கு பின்பு 12ம் வகுப்பு தேர்வு முடிவை வெளியிட வேண்டும் என்று பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

இது குறித்து தமிழக முதல்வரிடம் ஆலோசனை செய்து உரிய முடிவு எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் சற்று முன் வெளியான அறிவிப்பின்படி நீட் தேர்வுக்கு அடுத்த நாளான மே 8ஆம் தேதி காலை 9.30 மணி அளவில் 12 வது வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளது என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாம் தமிழர் கட்சியில் இருந்து யாரும் விலகவில்லை.. அவர்கள் எல்லாம் ஸ்லீப்பர் செல்: சீமான்

சங்கி என்றால் நண்பன் அல்லது தோழன் என்று அர்த்தம்: சீமான் விளக்கம்

கென்யாவை அடுத்து இலங்கையிலும் அதானி ஒப்பந்தம் ரத்து செய்யப்படுகிறதா?

22ஆம் தேதி ஆகியும் இன்னும் ரேசன் கடையில் துவரம் பருப்பு இல்லை: ராமதாஸ் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments