Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தென் தமிழகம் செல்லும் 12 ரயில்கள் பகுதி ரத்து! – முழு விவரம்!

Webdunia
திங்கள், 12 ஜூன் 2023 (08:26 IST)
தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் பகுதியில் ரயில்வே சுரங்கபாதை பணிகள் நடைபெற உள்ளதால் அப்பகுதி வழியாக செல்லும் 12 ரயில் சேவைகள் பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.



இதுகுறித்து ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, ஜூன் 13ம் தேதி பகுதியாக ரத்து செய்யப்படும் ரயில்கள் விவரங்கள்.

ஈரோடு – நெல்லை (16845) விரைவு ரயில் திண்டுக்கல் – நெல்லை இடையே ரத்து செய்யப்படுகிறது. நெல்லை – ஈரோடு (16846) விரைவு ரயில் நெல்லை – திண்டுக்கல் இடையே ரத்து.

கோவை – நாகர்கோவில் விரைவு ரயில் (16322) திண்டுக்கல் – நாகர்கோவில் இடையேயும், நாகர்கோவில் – கோவை விரைவு ரயில் (16321) நாகர்கோவில் – திண்டுக்கல் இடையேயும் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

திருச்சி – திருவனந்தபுரம் (22627) திருவனந்தபுரம் இடையேயும், திருவனந்தபுரம் – திருச்சி (22628) விரைவு ரயில் திருவனந்தபுரம் – விருதுநகர் இடையேயும் ரத்து. பாலக்காடு – திருச்செந்தூர் (16731) விரைவு ரயில் திண்டுக்கல் – திருச்செந்தூர் இடையேயும், திருச்செந்தூர் – பாலக்காடு (16732) விரைவு ரயில் திருச்செந்தூர் – திண்டுக்கல் இடையேயும் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

தூத்துக்குடி – மைசூர் விரைவு ரயில் (16235) தூத்துக்குடி – விருதுநகர் இடையேயும், மைசூர் – தூத்துக்குடி விரைவு ரயில் விருதுநகர் – தூத்துக்குடி இடையேயும் பகுதியாக ரத்து.

தாம்பரம் – நாகர்கோவில் விரைவு ரயில் (20691) திருச்சி – நாகர்கோவில் சந்திப்பு இடையேயும், நாகர்கோவில் – தாம்பரம் விரைவு ரயில் (20692) நாகர்கோவில் – திருச்சி இடையேயும் பகுதியாக ரத்து.

இதுதவிர குருவாயூர் – சென்னை விரைவு ரயில் (16128) இன்று நெல்லை, தென்காசி, விருதுநகர் வழியாக சென்னை சென்றடையும், நாகர்கோவிலில் இருந்து மும்பை செல்லும் விரைவு ரயில் (16340) நாளை (ஜூன் 13) நெல்லை, தென்காசி, விருதுநகர், வழியாக மும்பை செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடிக்கு தேர்தலில் பிரசாரம் செய்ததற்கு பிராயச்சித்தம் தேடுகிறேன்: சுப்ரமணிய சுவாமி

ஒரே வீட்டில் மூன்று பேர் கொலை.. எந்த கவலையும் இன்றி முதல்வர்: அண்ணாமலை..!

மனைவிக்காக இளம்பெண்ணிடம் தங்க செயினை பறித்த இளைஞர்.. சில மணி நேரத்தில் கைது..!

பால் உற்பத்தியில் சாதனை என கூறுவது மிகப்பெரிய மோசடி: பால் முகவர்கள் சங்கம்

வங்கக்கடலில் உருவானது ஃபெங்கல் புயல்.. மிக கனமழைக்கு எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments