சமீபத்தில் தமிழக சட்டமன்றத்தில் 12 மணி நேர வேலை மசோதா கொண்டுவரப்பட்ட நிலையில் தற்போது அந்த மசோதா திரும்ப பெறப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்றத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னால் 12 மணி நேர வேலை மசோதா கொண்டுவரப்பட்டது. இந்த மசோதாவுக்கு அதிமுக பாஜக போன்ற எதிர்கட்சிகள் மட்டும் இன்றி கூட்டணியில் இருந்த காங்கிரஸ் விடுதலை சிறுத்தைகள் உள்பட பல கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இந்த மசோதாவை திரும்ப பெற வேண்டும் என திமுக அரசுக்கு அரசியல் கட்சி பிரமுகர்கள் வலியுறுத்திய நிலையில் இந்த சட்டம் நிறுத்தப்பட்டதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது.
இந்த நிலையில் தற்போது தமிழக முதல்வர் முக ஸ்டாலின் 12 மணி நேர வேலை சட்ட மசோதா திரும்ப பெறப்பட்டதாக மே தின விழாவில் தெரிவித்துள்ளார். தொழிற்சங்கங்களின் கோரிக்கையை ஏற்று கடந்த 24 ஆம் தேதி சட்ட மசோதா இயற்றப்பட்ட நிலையில் அந்த மசோதா நிறுத்தி வைக்கப்பட்டதாக முதல்வர் அறிவித்துள்ளதை அனைவரும் இதனை வரவேற்றுள்ளனர்.