Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

புதுவையில் இன்று ஒரே நாளில் 1138 பேருக்கு கொரோனா: ஊரடங்கிற்கு வாய்ப்பு என தகவல்!

Advertiesment
புதுவையில் இன்று ஒரே நாளில் 1138 பேருக்கு கொரோனா: ஊரடங்கிற்கு வாய்ப்பு என தகவல்!
, செவ்வாய், 4 மே 2021 (18:02 IST)
தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் ஒன்றான புதுவையில் ஏற்கனவே கடந்த சில நாட்களாக ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்றும் மாநிலத்தில் ஆயிரத்து 138 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் 
 
மேலும் இன்று ஒரே நாளில் 886 பேனாவிலிருந்து கொரோனாவில் இருந்து குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாகவும் இன்று 17 பேர் உயிரிழந்ததாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
இதனை அடுத்து புதுவை மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 63298 என்றும் மொத்தமாக டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்கள் 51584என்றும் தற்போது சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 10849 என்றும் கொரோனாவால் மொத்தம்  உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 865 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இந்த நிலையில் கொரோனா வைரஸ் புதுவையில் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து முழு ஊரடங்கு பிறப்பிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டு வருகிறது. ஏற்கனவே அம்மாநிலத்தில் சனி ஞாயிறு முழு ஊரடங்கு என்பது குறிப்பிடத்தக்கது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கேரளாவில் இன்று தான் கொரோனா உச்சம்: ஒரே நாளில் 37,790 பேர் பாதிப்பு!