தமிழகத்தில் பிளஸ் டூ பொதுத்தேர்வு நேற்று முதல் தொடங்கியது. முதல் நாளில் 8 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர்.
அந்தவகையில், முதல் நாளில் நடைபெற்ற மொழிப்பாட தேர்வை 11,430 பேர் எழுதவில்லை என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று தமிழ் உள்ளிட்ட மொழிப்பாட தேர்வுகள் காலை 10 மணி முதல் மதியம் 1:15 வரை நடைபெற்றன. தேர்வர்கள் காலை 9:15 மணிக்கு முன்பாக தேர்வு மையத்திற்கு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இந்த நிலையில், 11,430 பேர் தேர்வெழுதவில்லை என்று அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
மேலும், தேர்வு எழுதிய மாணவர்கள், "தமிழ் மொழிப்பாடத் தேர்வு எளிதாக இல்லை. சற்று சிரமமாக இருந்தது" என கருத்து தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டும் மொழிப்பாட தேர்வை ஆயிரக்கணக்கான மாணவர்கள் எழுதவில்லை என்ற தகவல் வெளியான நிலையில் இந்த ஆண்டும் அதேபோன்ற ஒரு செய்தி பெரும் வருத்தத்தை அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். தமிழ் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழி பாடங்களை எல்லாம் மாணவர்கள் முழு அளவில் ஈடுபாட்டுடன் தேர்வு எழுத வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்
Edited by Siva