செல்போனை அதிகம் பயன்படுத்த வேண்டாம் என பெற்றோர் கண்டித்ததால் மனமுடைந்த பத்தாம் வகுப்பு மாணவி ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை புழல் பகுதியை சேர்ந்த ஹரிப்பிரியா என்ற மாணவி அரசு மேல்நிலைப் பள்ளியில் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார். இவர் அடிக்கடி செல்போனை பயன்படுத்தி வந்ததால் பத்தாம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் என்றும் அதனால் செல்போனை அதிகம் பயன்படுத்த வேண்டாம் என்றும் பெற்றோர் கண்டித்துள்ளனர்
இதனால் மனமுடைந்த ஹரிப்பிரியா அருகில் உள்ள ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. வெளியே சென்ற மகள் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை என தேடிய பெற்றோர்களுக்கு அவர் ஏரியில் குதித்து தற்கொலை செய்துகொண்டார் என்ற தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்