Webdunia - Bharat's app for daily news and videos

Install App

10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது! மாணவிகள் அதிகளவில் தேர்ச்சி.!

Webdunia
வெள்ளி, 19 மே 2023 (10:20 IST)
பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் இன்று வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சற்று முன் பத்தாம் வகுப்பு பொது தேர்வு வெளியாகி உள்ளது. இதனை மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர் 
 
கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதம் பத்தாம் வகுப்பு பொது தேர்வு நடந்த நிலையில் இந்த தேர்வு முடிவுகள் இன்று வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது 
 
அதன்படி சற்று முன்னர் தேர்வு துறை இயக்ககம் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவை வெளியிட்டுள்ளது. இந்த தேர்வில் வழக்கம்போல் மாணவர்களை விட மாணவிகள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்
 
 இந்த பொதுத் தேர்வில் மொத்தம் 91.39 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர் என்றும் மாணவிகள் 94.66% மாணவர்கள் 88. 16 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர் என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. 
 
மேலும் இந்த தேர்வு முடிவுகளை http://tnresults.nic.in , http://dge.tn.nic.in  ஆகிய இணையந்தளங்களில் பார்க்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போதைப்பொருள் விற்றவர்கள் எங்கே? ஸ்ரீகாந்த், கிருஷ்ணா அப்பாவிகள்: சீமான்

தேவைப்பட்டால் ஈரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்துவோம்: டிரம்ப் எச்சரிக்கை..!

கொல்கத்தா சட்டக்கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம்.. 55 வயது நபர் கைது..!

புரி ஜெகன்நாதர் ரத யாத்திரையில் அதானி குடும்பம்.. 40 லட்சம் பக்தர்களுக்கு உணவு, குளிர்பானம் வழங்கி உதவி..!

தபால் நிலையங்களிலும் யுபிஐ வசதி: ஆகஸ்ட் முதல் டிஜிட்டல் புரட்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments