Webdunia - Bharat's app for daily news and videos

Install App

10ம் வகுப்பு பொதுத்தேர்வு- கோவையில் 41,526 மாணவர்கள் தேர்வெழுதுகின்றனர்!

Webdunia
வியாழன், 6 ஏப்ரல் 2023 (10:37 IST)
இன்று 2022-23ம் ஆண்டிற்கான 10வகுப்பு பொதுத்தேர்வு துவங்குறது. இன்று துவங்கும் இந்த பொதுத்தேர்வானது 20ம் தேதி முடிவடைகிறது. முதல் நாளான இன்று மொழிப்பாட தேர்வு நடைபெறுகிறது. 
 
அதன்படி கோவை மாவட்டத்தில் அரசு பள்ளிகள், தனியார் பள்ளி, சுயநிதி பள்ளிகள் என 526 பள்ளிகளில் பயிலும்  20,936 மாணவர்கள், 20,590 மாணவிகள் என மொத்தம் 41,526 மாணவ மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். கோவை மாவட்டத்தில் தனித்தேர்வு மையங்களையும் சேர்த்து 157 மையங்களில் தேர்வு நடைபெறுகிறது. 
 
காலை 10 மணிக்கு துவங்கும் இந்த தேர்வானது மதியம் 1.15 மணிக்கு முடிவடைகிறது. இந்த தேர்வில் முறைகேடுகளை தடுப்பதற்காக 200 பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் 157 முதன்மை கண்காணிப்பாளர்கள், 157 துறை அதிகாரிகள்,  நியமிக்கப்பட்டுள்ளனர்.
 
மேலும் தேர்வு துவங்குவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாகவே அனைத்து தேர்வர்களும் தேர்வு எழுதும் மையங்களுக்கு வருகை புரிந்திருக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

‘நான்கு தலைமுறை வாழ்ந்த மாஞ்சோலை எஸ்டேட்டை விட்டு எங்கே போவது?’ - தொழிலாளர்கள் சொல்வது என்ன?

நான் இறந்துவிட்டேன்.. என் தொகுதி காலியாகிவிட்டது: லால்குடி எம்.எல்.ஏ அதிர்ச்சி பதிவு..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பு..! பின் வாங்கிய அதிமுக..! காரணம் என்ன.?

விஜய்யை அடுத்து அஜித்தும் அரசியல் கட்சி தொடங்குவார்: ஈவிகேஎஸ் இளங்கோவன்

சென்னை விமான நிலையத்திற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்.. கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments