Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கூட்டுறவு வங்கி அக்கவுண்ட் இருந்தாதான் ரூ.1000? – வங்கியில் கூடிய பெண்கள் கூட்டம்!

அரசு ஊழியர்களின் 6 நாள் சம்பளம் பிடித்தம்
, செவ்வாய், 25 ஜூலை 2023 (08:57 IST)
தமிழக அரசின் மகளிர் உரிமைத் தொகையை பெற கூட்டுறவு வங்கியில் கணக்கு வைத்திருப்பது அவசியம் என பரவிய புரளியால் பெண்கள் பலர் வங்கியில் குவிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அமைந்த நிலையில் தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி மாதம்தோறும் பெண்களுக்கு ரூ.1000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் ரேஷன் கடைகள் மூலமாக பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் பெண்கள் உரிமைத் தொகை பெற வேண்டுமானால் கூட்டுறவு வங்கியில் கணக்கு வைத்திருப்பது அவசியம் என ஒரு வதந்தி பரவியுள்ளது. இதை நம்பி ஏராளமான பெண்கள் ஆலங்குடி மத்திய கூட்டுறவு வங்கியில் புதிய கணக்கு தொடங்குவதற்காக குவிந்துள்ளனர்.

திடீரென இவ்வளவு மக்கள் குவிந்ததால் வங்கி அதிகாரிகளே திக்குமுக்காடி போயுள்ளனர். பின்னர் தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஏதாவது ஒன்றில் கணக்கு இருந்தாலே போதுமானது என அவர்கள் மக்களுக்கு விளக்கம் அளித்துள்ளனர். எனினும் பலர் எதற்கும் கூட்டுறவு வங்கியிலும் ஒரு கணக்கு இருக்கட்டும் என புதிய கணக்கை தொடங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Edit by Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகம் போலவே புதுச்சேரியிலும்.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு ஒதுக்கீடு..!