இன்று பாசிட்டிவ் ஆன 102 பேர்களில் எத்தனை பேர் டெல்லி ரிட்டர்ன்ஸ்: அதிர்ச்சி தகவல்

Webdunia
வெள்ளி, 3 ஏப்ரல் 2020 (18:12 IST)
கொரோனா வைரசால் தமிழகத்தில் இன்று மட்டும் 102 பேர் பாசிட்டிவ் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சில மணி நேரங்களுக்கு முன்னர் தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்தது என்பதை பார்த்தோம்
 
இந்த நிலையில் சற்று முன்னர் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியபோது ’இன்று மட்டும் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் என 102 பேர்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அதில் 100 பேர் டெல்லி மத மாநாட்டில் கலந்துகொண்டு தமிழகம் திரும்பியவர்கள் என்றும் ஒருவர் அமெரிக்காவில் இருந்து திரும்பியவர் என்றும் இன்னொரு குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் தெரிவித்தார்
 
எனவே ஏற்கனவே டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டு தமிழகம் திரும்பியவர்கள் 264 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு இருந்த நிலையில் இன்றைய 100 பேர்களையும் சேர்த்தால் 364 பேர் டெல்லி மாநாட்டில் இருந்து திரும்பி வந்தவர்களுக்கொ கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிவியை தூக்கி எறிந்துவிட்டு பின்னர் ஏன் திமுகவுடன் கூட்டணி? கமல் சொன்ன விளக்கம் யாருக்காவது புரிந்ததா?

இன்று முதல் நவம்பர் 22 வரை தமிழகத்தில் மழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

ரிமோட்லாம் தூக்கி போட்டு உடைச்சிட்டு ஏன் திமுக?.. கமல் புதிய விளக்கம்...

பெங்களூரை விட்டு வெளியேறினால் கோடிக்கணக்கில் சலுகை.. கர்நாடக அரசு அதிரடி அறிவிப்பு..!

உயிர் போகும்போதும் குழந்தைகளை காப்பாற்றிய ஆட்டோ ஓட்டுனர்!.. சென்னையில் சோகம்!..

அடுத்த கட்டுரையில்
Show comments