பாமக முன்னாள் எம்எல்ஏவும் வன்னியர் சங்கத் தலைவருமான காடுவெட்டி குரு காலமானதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் 100 அரசு பேருந்துகள் அடித்து நொறுக்கப்பட்டன.
பாட்டாளி மக்கள் கட்சியின் முக்கிய தலைவரும் முன்னாள் எம்.எல்.வுமான காடுவெட்டி குரு உடல்நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவருடைய உடல்நிலை கவலைக்கிடமாக இருந்தது.
இந்நிலையில் கடந்த 25-ந்தேதி காடுவெட்டி குரு, சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். அவருடைய மறைவிற்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் பாமகவினர் அரசு பேருந்துகள் மீது கல்வீசி தாக்குதல் நடத்திவருகின்றனர். இதுவரை 100 பேருந்துகள் தாக்குதல்களுக்கு ஆளாகியுள்ளது. தாக்குதலில் ஈடுபட்ட 13 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.