Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாடு அரசின் செயல்பாட்டிற்கு 100/100 மார்க்- அண்ணாமலை

Webdunia
வெள்ளி, 17 டிசம்பர் 2021 (15:58 IST)
தமிழ்நாடு அரசின் செயல்பாட்டிற்கு 100/100 மார்க் அளித்து பாராட்டியுள்ளார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.

கடந்த 8 ஆம் தேதி குன்னூரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்கு உள்ளானதில் முப்படை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்த சம்பவம் தேசிய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  இந்த விபத்தில் விமானப்படை கேப்டன் வருண்சிங் 80 சதவீதம் உடல் எரிந்த நிலையில் பெங்களூர் விமானப்படை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தார்.

சில தினங்களுக்கு முன் கேப்டன் வருண்சிங் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக இந்திய விமானப்படை தெரிவித்தது. ஹெலிகாப்டரில் பயணித்த 14 பேருமே உயிரிழந்துள்ள சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள நஞ்சப்பசந்திரம் பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது.

எனவே,  அந்த கிராமத்தில் நடைபாதை வசதி, தடுப்பு சுவர் அமைத்தல், பழுதான வீடுகளை சீரமைத்தல் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள 2 கோடியே 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், தமிழ்நாடு அரசின் செயல்பாட்டிற்கு 100/100 மார்க் அளித்து பாராட்டியுள்ளார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:

குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிற
ப்பாகச் செயல்பட்ட தமிழ்நாடு அரசு, காவல்துறை மற்றும் ஊடகத்துறையினருக்கு 100/100 மார்க்க என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

AI தொழில்நுட்பத்தில் கேப்டன்.! திரைத்துறையினருக்கு செக் வைத்த பிரேமலதா..!

புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிர்ப்பு: சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் போராட்டம்..!

தூத்துக்குடி கே.எஃப்.சி. உணவகத்தின் உணவு பாதுகாப்பு உரிமம் இடைக்கால ரத்து.. என்ன காரணம்?

வாயில் வடை சுடுகிறார் அண்ணாமலை.! ஓ.பி.எஸ்-ஐ கட்சியில் சேர்க்க முடியாது..! எடப்பாடி பழனிச்சாமி..!!

பிரிட்டன் தேர்தல்: ரிஷி சுனக் கட்சி தோல்வி! 14 ஆண்டுகள் கழித்து ஆட்சியை பிடித்த இடதுசாரி கட்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments