ஊரடங்கால் வறுமை: குடும்பத்தை காப்பாற்ற வாழைப்பழம் விற்கும் 10 வயது சிறுவன்!

Webdunia
வியாழன், 24 செப்டம்பர் 2020 (07:51 IST)
குடும்பத்தை காப்பாற்ற வாழைப்பழம் விற்கும் 10 வயது சிறுவன்!
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 5 மாதங்களுக்கு மேலாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதால் கோடிக்கணக்கான வேலையிழந்து வருமானம் இன்றி தவித்து வருகின்றனர் என்பது தெரிந்ததே 
 
இந்த நிலையில் கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட தனது குடும்பத்தை காப்பாற்றுவதற்காக ஐந்தாம் வகுப்பு படிக்கும் பத்து வயது சிறுவன் வாழைப்பழம் விற்று தனது குடும்பத்தை காப்பாற்றி வரும் தகவல் பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது
 
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் தனது குடும்ப சூழ்நிலையை உணர்ந்து தினசரி வாழைப்பழம் விற்று வருகிறார். ஒவ்வொரு தெருவுக்கும் சைக்கிளில் சென்று வாழைப்பழம் விற்று அதில் கிடைக்கும் வருமானத்தை வைத்து தனது குடும்பத்தை காப்பாற்றி வருகிறார்
 
ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டபோதிலும் மனம் தளராமல் தனது குடும்பத்தை காப்பாற்றுவதற்காக வாழைப்பழம் விற்பனை செய்யும் அந்த சிறுவனை அந்தப் பகுதி மக்கள் பாராட்டி அவனிடம் வாடிக்கையாக வாழைப்பழங்களை வழங்கி வருகின்றனர் அந்த சிறுவனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இம்ரான் கானை அரசியல் கைதியாக ஏற்கிறதா இந்தியா? பாகிஸ்தான் ஊடகம் பரப்பிய தகவல்..!

திருப்பரங்குன்றம் மலை தீபம் சர்ச்சை: தர்கா அருகே தீபம் ஏற்றும் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு!

விஜயின் ரோட் ஷோவுக்கு புதுச்சேரி காவல்துறை அனுமதி மறுப்பு!...

20 நிமிடங்களில் முறிந்த திருமணம்: மணமகள் மறுத்ததால் ஊர் பஞ்சாயத்தில் விவாகரத்து!

பாஜக வேட்பாளராக போட்டியிடும் சோனியா காந்தி.. தமிழில் அடித்த போஸ்டரால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments