முதல்முறையாக 10 ஆயிரத்தை தாண்டிய ஒருநாள் கொரோனா பாதிப்பு!

Webdunia
ஞாயிறு, 18 ஏப்ரல் 2021 (19:42 IST)
தமிழகத்தில் தினந்தோறும் கொரோனா பாதிப்பு குறித்த தகவல்களை தெரிவித்து வரும் தமிழக சுகாதாரத்துறை இன்று தமிழகத்தில் 10,723 பேர்களுக்கு புதிதாக கொரோனா தொற்று பரவி இருப்பதாக அறிவித்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 9,91,451 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
மேலும் இன்று கொரோனாவால் பாதிப்பு அடைந்த 10,723 பேர்களில் 3,304 பேர்கள் சென்னையை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 42 பேர் பலியாகியுள்ளதை அடுத்து தமிழகத்தில் பலி எண்ணிக்கை 13,113 ஆக உயர்ந்துள்ளது என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. 
 
மேலும் தமிழகத்தில் இன்று 5925 பேர் கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளனர். இதனையடுத்து தமிழகத்தில் குணமானோர் எண்ணிக்கை 907,947 ஆக உயர்ந்துள்ளது. மேலும் தமிழகத்தில் இன்று 110,130 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் இதனையடுத்து கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 211,87,630 என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2 நாட்களில் 35 பேர் நாய்க்கடியால் பாதிப்பு.. தென்காசி அருகே மக்கள் பதட்டம்..!

இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு.. எந்த நாட்டு எழுத்தாளருக்கு?

பீகார் தேர்தல்: பிரசாந்த் கிஷோர் அறிவித்த வேட்பாளர் பட்டியலில் கணித மேதை, வழக்கறிஞர், மருத்துவர்..!

இது கூட்டணிக்கான பிள்ளையார் சுழி என்று பேசிய ஈபிஎஸ்.. மறுப்பு தெரிவித்த தவெக..!

விஜய் மீண்டும் கரூருக்கு சென்றால் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம்: நயினார் நாகேந்திரன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments