இன்றும் 1800க்கும் குறைந்த கொரோனா பாதிப்பு!

Webdunia
செவ்வாய், 27 ஜூலை 2021 (21:29 IST)
தமிழகத்தில் தினந்தோறும் கொரோனா பாதிப்பு குறித்த தகவல்களை தெரிவித்து வரும் தமிழக சுகாதாரத்துறை இன்று தமிழகத்தில் 1,767 பேர்களுக்கு புதிதாக கொரோனா தொற்று பரவி இருப்பதாக அறிவித்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 25,52,049 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
மேலும் இன்று கொரோனாவால் பாதிப்பு அடைந்த 1,767 பேர்களில் 139 பேர்கள் சென்னையை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 29பேர் பலியாகியுள்ளதை அடுத்து தமிழகத்தில் பலி எண்ணிக்கை 33,966 ஆக உயர்ந்துள்ளது என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. 
 
மேலும் தமிழகத்தில் இன்று 2,312 பேர் கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளனர். இதனையடுத்து தமிழகத்தில் குணமானோர் எண்ணிக்கை 24,95,895 ஆக உயர்ந்துள்ளது. மேலும் தமிழகத்தில் இன்று 1,43,310 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் இதனையடுத்து கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 368,15,337 என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 மாதமாக டிஜிட்டல் அரெஸ்டில் இருந்து பெண் மென்பொருள் பொறியாளர்.. ரூ.32 கோடி இழப்பு..!

தென்மேற்கு வங்கக்கடலில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி.. கனமழை எச்சரிக்கை..!

முதல்வர் ஸ்டாலின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. 13 திரையுலக பிரபலங்கள் வீடுகளுக்கும் மிரட்டல்..!

தமிழகத்தில் தேர்தல் பணிகள் முடக்கம்: வாக்காளர் பட்டியல் திருத்த பணியை புறக்கணிக்க வருவாய்த்துறை முடிவு!

லாலு பிரசாத் யாதவ் வீட்டில் குடும்ப சண்டை.. வீட்டை விட்டு வெளியேறிய 4 மகள்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments