Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு எவ்வளவு?

Webdunia
திங்கள், 27 செப்டம்பர் 2021 (19:31 IST)
தமிழகத்தில் தினந்தோறும் கொரோனா பாதிப்பு குறித்த தகவல்களை தெரிவித்து வரும் தமிழக சுகாதாரத்துறை இன்று தமிழகத்தில் 1,657 பேர்களுக்கு புதிதாக கொரோனா தொற்று பரவி இருப்பதாக அறிவித்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 26,58,923 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
மேலும் இன்று கொரோனாவால் பாதிப்பு அடைந்த 1,657 பேர்களில் 186 பேர்கள் சென்னையை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 19 பேர் பலியாகியுள்ளதை அடுத்து தமிழகத்தில் பலி எண்ணிக்கை 35,509 ஆக உயர்ந்துள்ளது என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. 
 
மேலும் தமிழகத்தில் இன்று 1,662 பேர் கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளனர். இதனையடுத்து தமிழகத்தில் குணமானோர் எண்ணிக்கை 26,06,153 ஆக உயர்ந்துள்ளது. மேலும் தமிழகத்தில் இன்று 1,51,880 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் இதனையடுத்து கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 465,38,112 என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாக்லேட் தருவதாக சொல்லி 6 வயது சிறுமிக்கு வன்கொடுமை! பேக்கரி ஓனர் கைது!

உலகப் பிரபலமான திருவாரூர் தேர் திருவிழா இன்று! - பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்!

பிரதமரை அவமானப்படுத்திய முதல்வர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும்: அண்ணாமலை

37 ஆண்டுகள் கழித்து இன்று கருப்பு திங்கள்? ரத்தக்களறி ஆகுமா பங்குச்சந்தை?

உதகையில் இ-பாஸ் கட்டுப்பாடு: கடும் போக்குவரத்து சிக்கலால் சுற்றுலா பயணிகள் அவதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments