Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் மீண்டும் 1600ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு!

Webdunia
வெள்ளி, 10 செப்டம்பர் 2021 (22:13 IST)
தமிழகத்தில் தினந்தோறும் கொரோனா பாதிப்பு குறித்த தகவல்களை தெரிவித்து வரும் தமிழக சுகாதாரத்துறை இன்று தமிழகத்தில் 1,631 பேர்களுக்கு புதிதாக கொரோனா தொற்று பரவி இருப்பதாக அறிவித்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 26,30,592 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
மேலும் இன்று கொரோனாவால் பாதிப்பு அடைந்த 1,631 பேர்களில் 174 பேர்கள் சென்னையை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 25 பேர் பலியாகியுள்ளதை அடுத்து தமிழகத்தில் பலி எண்ணிக்கை 35,119 ஆக உயர்ந்துள்ளது என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. 
 
மேலும் தமிழகத்தில் இன்று 1,523 பேர் கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளனர். இதனையடுத்து தமிழகத்தில் குணமானோர் எண்ணிக்கை 25,79,169 ஆக உயர்ந்துள்ளது. மேலும் தமிழகத்தில் இன்று 1,58,197 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் இதனையடுத்து கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 439,06,770 என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போலி உறுப்பினர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டதா? அறப்போர் இயக்கம் கேள்வி..!

ராஜ்யசபா தலைவருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தள்ளுபடி: பெரும்பான்மை இல்லை என அறிவிப்பு..!

ராகுல் காந்தி என்னை நெருங்கி வந்தார்: பா.ஜ.க. பெண் எம்.பி. புகாரால் பரபரப்பு.!

பாஜக எம்பிக்கள் தள்ளியதால் எனக்கு காயம்: மல்லிகார்ஜுன கார்கே புகார்

காங்கிரஸ் கட்சியின் வன்முறை நாடாளுமன்றம் வரை சென்றுள்ளது: கங்கனா ரனாவத்

அடுத்த கட்டுரையில்
Show comments