நேற்று ஒரே நாளில் 1.20 லட்சம் இபாஸ்:
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே. குறிப்பாக தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக ஊரடங்கு காரணமாக மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் முக்கிய காரணங்களுக்காக செல்பவர்களுக்கு மட்டுமே இபாஸ் வழங்கப்பட்டது. இருப்பினும் இபஸ் விண்ணப்பித்த பலருக்கு நிராகரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் நேற்று முதல் தமிழகத்தில் விண்ணப்பித்த அனைவருக்கும் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டதை அடுத்து ஏராளமானோர் இபாஸ் பெற விண்ணப்பம் செய்தனர். நேற்று ஒரே நாளில் 1.2 லட்சம் பேருக்கு இபாஸ் வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது
மேலும் நேற்று இபாஸ் தளர்வு என்பதை அறியாமல் இபாஸ் ரத்து என நினைத்து சிலர் சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கும், சொந்த ஊர்களில் இருந்து சென்னைக்கும் படையெடுக்க தொடங்கினர். ஆனால் அவர்களை போலீசார் மடக்கி திருப்பி அனுப்பினார்
இபாஸ் நடையில் தளர்வு ஏற்பட்டதை அடுத்து சென்னைக்கு கூட்டம் கூட்டமாக பொதுமக்கள் நேற்றும் இன்றும் வந்து கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே மீண்டும் சென்னை பிசியான நகரமாக மாறி வருகிறது