Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் இன்றைய கொரோன வைரஸ் பாதிப்பு எவ்வளவு?

Webdunia
ஞாயிறு, 31 அக்டோபர் 2021 (20:10 IST)
தமிழகத்தில் தினந்தோறும் கொரோனா பாதிப்பு குறித்த தகவல்களை தெரிவித்து வரும் தமிழக சுகாதாரத்துறை இன்று தமிழகத்தில் 1,009 பேர்களுக்கு புதிதாக கொரோனா தொற்று பரவி இருப்பதாக அறிவித்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 27,02,623 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
மேலும் இன்று கொரோனாவால் பாதிப்பு அடைந்த 1,009 பேர்களில் 114 பேர்கள் சென்னையை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 19 பேர் பலியாகியுள்ளதை அடுத்து தமிழகத்தில் பலி எண்ணிக்கை 36,116 ஆக உயர்ந்துள்ளது என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. 
 
மேலும் தமிழகத்தில் இன்று 1,183 பேர் கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளனர். இதனையடுத்து தமிழகத்தில் குணமானோர் எண்ணிக்கை 26,55,015 ஆக உயர்ந்துள்ளது. மேலும் தமிழகத்தில் இன்று 1,23,701 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் இதனையடுத்து கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 511,59,242 என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

ஆர்.எஸ்.எஸ். அழைத்தால் சென்றுவிடுவேன்: ஓய்வு பெறும் நாளில் பேசிய உயர் நீதிமன்ற நீதிபதி!

நாளை உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.. இன்று முதல் 26ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு..!

இலங்கை சீதை கோயிலில் மகா கும்பாபிஷேகம்: இந்தியாவிலிருந்து சென்ற சீர்வரிசைகள்..!

ஜூன் 4ஆம் தேதிக்கு பின் ராகுல் காந்தி ஒரு யாத்திரைக்கு செல்வார்.. அமித்ஷா கிண்டல்..!

ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு: பாஜகவின் 2 பிரபலங்கள் ஆஜராக சிபிசிஐடி சம்மன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments