Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

‌வீர‌ப்ப‌ன் கூ‌ட்டா‌ளிகளு‌க்கு தூ‌க்கு - கர்நாடகா‌வி‌ற்கு‌ள் நுழைய முய‌ன்ற 42 பேர் கைது

ஈரோடு செ‌ய்‌தியாள‌ர் வேலு‌ச்சா‌மி

Advertiesment
வீரப்பன் கூட்டாளிகள் தூக்கு
, செவ்வாய், 19 பிப்ரவரி 2013 (13:13 IST)
webdunia photo
WD
கர்நாடக மாநில சிறையில் உள்ள வீரப்பன் கூட்டாளிகள் நால்வருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் எ‌ன்ற கோரிக்கையை வ‌லியுறு‌த்‌தி பண்ணாரியில் ஆர்‌ப்பாட்டம் நடத்தி தடையை மீறி கர்நாடகா மாநிலம் நோக்கி நடைபயணம் தொடங்கிய தலித் விடுதலை கட்சியை சேர்ந்த நான்கு பெண்கள் உட்பட 42 பேர் கைது செய்யப்பட்டனர்.

கடந்த 1993 ம் ஆண்டு தமிழ்நாடு, கர்நாடகா எல்லை‌ப் பகுதியான பாலாற்றில் நடந்த கண்ணிவெடி தாக்குதலில் 22 போலீசார் கொல்லப்பட்டனர். இந்த வழங்கில் சந்தனக்கடத்தல் வீரப்பனின் மூத்த சகோதரர் ஞானபிரகாச‌ம் மற்றும் சைமன், ‌‌மீசை மாதைய‌ன், பிலவேந்‌திரன் ஆகிய நால்வருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த தூக்கு தண்டனையை ரத்து செய்ய கோரி தமிழ்நாடு விடுதலை கட்சி சார்பாக கர்நாடக மாநிலம் வரை நடைபயணம் சென்று அங்கு சிறையில் உள்ள நால்வரையும் மீட்கும் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.

webdunia
webdunia photo
WD
தாளவாடி பகுதியில் இம்மாதம் 28ம் தேதி வரை 144 தடை சட்டம் அமுலில் இருப்பதால் இவர்கள் நடைபயணத்திற்கு போலீசார் அனுமதி தரவில்லை. தடையை மீறி நடைபயணம் மேற்கொள்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் நேற்று காலை சத்தியமங்கலம் போலீஸ் டி.எஸ்.பி. முத்துசாமி மேற்பார்வையில் சத்தியமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சௌந்திரராஜன் தலைமையில் பண்ணாரியில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

webdunia
webdunia photo
WD
பண்ணாரி சோதனை சாவடி அருகில் வீரப்பன் கூட்டாளிகள் நால்வரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யகோரி ஆர்‌ப்பாட்டம் நடத்தி நடைபயணத்தை தொடங்கினர். நடைபயணத்தை தொடங்கியதும் போராட்டத்தில் ஈடுபட்ட 4 பெண்கள் உட்பட 42 பேரை போலீசார் கைது செய்து மாலையில் விடுதலை செய்தனர்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil