வாகனத்துறையில் ஆசியாவின் தலைநகரம் சென்னை - ஜெயலலிதா புகழாரம்
, புதன், 18 ஏப்ரல் 2012 (16:17 IST)
வாகனத்துறையில் ஆசியாவின் தலைநகரமாக சென்னை விளங்குகிறது என தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா புகழாரம் சூட்டியுள்ளார். சென்னை ஒரகடத்தில் உள்ள டெய்ம்லர் இந்தியாவின் புதிய ஆலையை திறந்து வைத்து பேசிய ஜெயலலிதா இதனை தெரவித்தார். மேலும் அவர், 1992ம் ஆண்டு முதல் அந்நிய முதலீட்டை ஈர்ப்பதில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது என்றார். அதே போல் வாகன உதிரிபாக உற்பத்தி மற்றும் ஏற்றுமதியிலும் தமிழகம் முதலிடத்தில் உள்ளது என்றார்.வாகன உற்பத்தி செய்யும் உலகின் 10 நகரங்களில் ஒன்றாக சென்னை நகரம் உள்ளது என தெரிவித்தார்.