Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மின்சாரம் எப்ப வருமோ? கடவுளை அழைத்த கருணாநிதி!

Advertiesment
திமுக தலைவர் கருணாநிதி
, திங்கள், 29 அக்டோபர் 2012 (06:58 IST)
திமுக தலைவர் கருணாநிதி, வழக்கு எப்போது முடியுமோ? மத்திய அரசு எப்போது மின்சாரம் தருமோ? யாமறியேன் பரம்பொருளே என்று கடவுளை அழைத்து தமிழக அரசை விமர்சனம் செய்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள கேள்வி பதில் பாணியிலான அறிக்கை வருமாறு:

கேள்வி :- கோவையில் நேற்று சிறுகுறு தொழிற்கூடங்கள் கதவடைப்புப் போராட்டம் நடத்தியிருக்கின்றார்களே?

கலைஞர் :- அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகத் தின் மற்றப் பகுதிகளைப் போலவே கோவைப் பகுதியிலும் 13 மணி நேரம் முதல் 16 மணி நேரம் வரை தினந்தோறும் மின்வெட்டு மக்களை மட்டுமல்லாமல், தொழிற்சாலைகளையும் பெரிதும் வாட்டி வதைத்து வருகிறது.

கோவை யில் இருபதாயிரத்திற்கு மேற்பட்ட “இஞ்சினீயரிங்” நிறுவனங்கள் “லேத்”பட்டறைகள் உட்பட, சிறு குறுந்தொழில்கள் மிகக் கடுமையான பாதிப்புக்குஉள்ளாகியிருக் கின்றன.

பத்தாயிரம் நடுத்தர, பெரிய நிறு வனங்களும் இதுவரை இல்லாத அளவுக்கு பெரும் உற்பத்தி இழப்பைச் சந்தித்து வருகின் றன. இந்த நிறுவனங்களில் பணி புரிந்து வாழ்வாதாரத்தை உருவாக்கிக் கொண்டு வரும் ஐந்து இலட்சம் தொழிலாளர்கள் தாங்கள் இதுவரை பெற்றுவந்த கூலியை இழந்து வருமானம் குறைந்து மிகப்பெரிய நெருக்கடி யில் சிக்கித் தவிக்கின்றனர்.

கோவை மாநகரத் தில் மட்டும் அ.தி.மு.க. அரசின் மின் வெட்டுக் காரணமாக ஆறாயிரம் சிறு குறு தொழிற் கூடங்கள் மூடப்பட்டிருக்கின்றன. இந்த நிலையிலேதான் பாதிக்கப்பட்ட தொழிற் நிறுவனங்கள் கோவை மாநகரத்திலே கதவடைப்புப் போராட்டத்தை நடத்தி அ.தி.மு.க. அரசின் கவனத்தை ஈர்க்க முயற்சி செய்திருக் கின்றன.

ஆனால் அ.தி.மு.க. அரசோ அமைச்சரவையைக் கூட்டி, காவிரி நீர்கேட்டு உச்ச நீதி மன்றத்தில் கர்நாடக அரசுக்கு எதிராக வழக்குத் தொடுத்ததைப் போல - இப்போதும் மத்திய அரசுக்கு எதிராக உச்ச நீதி மன்றத்திலே வழக்கு போடப் போகிறோம் என்று அறிவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

வழக்கு எப்போது முடியுமோ? மத்திய அரசு எப்போது மின்சாரம் தருமோ? அப்படித் தந்தாலும் அந்த மின்சாரத்தைக் கொண்டு வருவதற்கான “காரிடாரை” உடனடியாக உருவாக்கித் தருவார்களா என்பதைப் பற்றியெல்லாம் யாமறியோம்; பராபரமே!

Share this Story:

Follow Webdunia tamil