மகாவீர் ஜெயந்தியையொட்டி அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா, தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், பாரதத்தின் தத்துவப் புதல்வர்களில் ஒருவரான பகவான் மகாவீரரின் பிறந்த நாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் சமண, சமய மக்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த நல்வாழ்த் துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
மும்மணிகள் என்று அழைக்கப்படும் நன்னம்பிகை நல்லறிவு நன்னடத்தை ஆகியவற்றை போதித்தவர் மகாவீரர். எல்லா உயிர்களும் சமம் என்ற கருத்தை முன்னிலைப்படுத்தியவர் மகாவீரர். கொல்லாமைக்கு முக்கியத்துவம் கொடுத்தவர் மகாவீரர். சாதிக் கொடு மையை ஒழிக்க பாடுபட்டவர் மகாவீரர்.
மகாவீரரின் சிந்தனைகளை சிந்தையில் கொண்டு, தமிழகம் எங்கும் அன்பும், அறநெறியும் தழைத் தோங்கிட அனைவரும் பாடுபட வேண்டும் என்ற என்னுடைய விருப்பத்தை தெரிவித்துக் கொண்டு மகாவீர் ஜெயந்தியை கொண்டாடும் அனைவருக்கும் என் இனிய நல்வாழ்த்துக்களை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
விஜயகாந்த் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், பிற உயிர்களுக்கு தீங்கு செய்யாதது மட்டுமல்ல, அவைகளுக்கு ஏற்பட்ட கஷ்டங்களைப் போக்குவதும் எக்காரணத்தைக் கொண்டும் எந்த உயிரையும் கொல்லாமையும் கொள்கையாக வகுத்து தந்தவர் மகான் மகாவீரர் ஆவார். அரச குடும்பத்தில் பிறந்தும் அதில் நாட்டம் கொள்ளாமல் துறவை மேற்கொண்டவர்.
மனித குலம் அன்பும், அருளும் கொண்டு வாழ்க்கையில் வன்முறையை அறவே கைவிட்டு ஒன்றுபட்டு வாழ வேண்டும் என்று அருளுரை தந்தவர். அவரது பிறந்த நாளான நாளை அவர் போதித்த சமண சமயத்தை கடைப்பிடிக்கும் சான்றோர் பெருமக்களுக்கு எனது இதயமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த நன்னாளில் ஏழை, எளிய மக்களுக்கு நன்மை செய்யவும், எல்லா நலன்களும் இந்த மார்க்கத்தை கடைப்பிடிப் பவர்களுக்கு ஏற்படவும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் இறைவன் அருள் புரிய வேண்டிக் கொள்ளுகிறேன் என்று கூறியுள்ளார்.