தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றாலும், தோற்றாலும் எங்கள் கூட்டணி தி.மு.க.வுடன் தான் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
அரக்கோணம் தொகுதியில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்த தொல்.திருமாவளவன், சாதாரணமான மக்களுக்கான திட்டங்களைத் தீட்டியவர் முதல்வர் கருணாநிதிதான். பிச்சைக்காரர்களுக்கு மறுவாழ்வுத் திட்டம் கொண்டு வந்தது, மனிதக் கழிவை மனிதனே அகற்றும் நிலையை ஒழிக்க உறுதிபூண்டுள்ளதும் தி.மு.க. அரசு மட்டும்தான்.
விடுதலைச் சிறுத்தைகள் சட்டப்பேரவையில் விடுத்த கோரிக்கையை ஏற்று, அரவானிகள், நரிக்குறவர்கள், நாட்டுப்புறக் கலைர்கள் என அடிமட்டத்தில் இருப்பவர்களுக்கு வாரியம் அமைத்தவர் முதல்வர் கருணாநிதிதான்.
தற்போதைய தேர்தல் கூட்டணிக்காக அ.தி.மு.க.விலிருந்து தூது வந்தது. நான் நன்றி உணர்வு மிக்கவன். கசப்பான அனுபவங்கள் எங்களுக்கும் உண்டு. வெற்றி பெற்றாலும், தோற்றாலும் இனி எங்கள் கூட்டணி தி.மு.க.வுடன்தான் என்று திருமாவளவன் கூறியுள்ளார்.