தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகுதான் எந்த முடிவையும் எடுக்க முடியும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
கொடநாட்டில் இருந்து சென்னைக்கு திரும்பிய ஜெயலலிதா, விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார்.
நாட்டின் சாதாரண குடிமகனைப் போலவே நானும் தேர்தல் முடிவுகளை எதிர்பார்த்து இருக்கிறேன். முடிவுகள் தெரியாத நிலையில் என்னால் முடிவு எதுவும் எடுக்க முடியாது. முடிவுகள் வெளியான பிறகு முடிவு எடுக்கப்படும் என்று கூறினார்.
மேலும், 3வது அணி அமையுமா என்று செய்தியாளர் ஒருவர் கேட்டதற்கு, தற்போதைய நிலையில் எதையும் கூற முடியாது என்று பதிலளித்தார்.