Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுக நகராட்சியினை கண்டித்து நகர்மன்றத்திலேயே தர்ணா போராட்டம்.

Webdunia
வியாழன், 1 டிசம்பர் 2022 (22:20 IST)
புகளூர் நகராட்சியில் 24 வது வார்டு நகர்மன்ற உறுப்பினர்களில் தன்னந்தனியாக ஒருவராக பாஜக நகர்மன்ற உறுப்பினரின் திடீர் தர்ணாவினால் கரூர் அருகே பரபரப்பு – மாதம், மாதம் மக்களுக்காக கொடுக்கப்பட்டு வரும் மனுக்களை கண்டுகொள்ளாத திமுக நகராட்சியினை கண்டித்து நகர்மன்றத்திலேயே தர்ணா போராட்டம்.
 
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புகளூர் நகராட்சி தற்போது தான் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு அதன் தலைவராக திமுக வினை சார்ந்த நொய்யல் குணசேகரன் தேர்ந்தெடுக்கப்பட்டு, தற்போது வரை தலைவராக இருந்து வருகின்றார். இந்த நகராட்சியில் மொத்தமுள்ள 24 வார்டுகள் உள்ள நிலையில், ஒரு வார்டு மட்டும் அதிமுக வும், மற்றொரு வார்டு பாஜக வும் கைப்பற்றியது. மீதமுள்ள 22 வார்டுகளையும் திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் கைப்பற்றியது. இந்நிலையில்,. பாஜக  புகளூர் நகர தலைவராக உள்ள ரா.கோபிநாத், அந்த நகராட்சியின் 8 வது வார்டு நகர்மன்ற உறுப்பினராக இருந்து வருகின்றார். இந்நிலையில், இன்று நகராட்சியின் மாதாந்திர சாதாரண கூட்டம் நடைபெற்றது. இதில், பாஜக நகர்மன்ற உறுப்பினரது வார்டு மொத்தமாக புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும், அடிப்படை வசதிகளான குடிநீர் பிரச்சினை, கழிவு நீர் பிரச்சினை உள்ளிட்ட எந்த வித பிரச்சினைகளையும், கண்டுகொள்ளாமல், திமுக நகராட்சியானது அப்படியே விட்டு விட்டுள்ளது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜக பிரமுகரும், 8 வது வார்டு நகர்மன்ற உறுப்பினருமான ரா.கோபிநாத், இதனை கண்டிக்கும் விதமாகவும், மக்களுக்காக போராட, நகராட்சி கூட்டத்தினை புறக்கணித்தார். நகராட்சி அலுவலகத்தின் உள் பகுதியிலேயே கூட்டம் தொடங்கியது முதல் கூட்டம் முடிந்த பின்னரும் அவரது தர்ணா போராட்டம் நீடித்தது. அதன் பின்னர் நகராட்சியின் ஆணையர் உறுதியளித்து, கண்டிப்பாக மக்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றி தரப்படும் என்று கூறியதையடுத்து அவரது தர்ணா போராட்டம் முடிவுக்கு வந்தது. இந்த போராட்டத்தினால் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக பரபரப்பு நீடித்தது.
 
பேட்டி : ரா.கோபிநாத் – 8 வது நகர்மன்ற உறுப்பினர் – புகளூர் நகர பாஜக தலைவர்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சர் ஆகிறார் ரேகா குப்தா.. இன்று பதவியேற்பு..!

வரி ஏய்ப்பு வழக்கு: இத்தாலிக்கு ரூ.2953 கோடி கொடுக்க கூகுள் சம்மதம்..!

கோவை சிபிஎஸ்சி பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. 56 வயது ஓவிய ஆசிரியர் கைது..!

பொதுத்தேர்வில் முறைகேடுகளை தடுக்க புதிய நடைமுறை.. தமிழக தேர்வுகள் இயக்ககம் தகவல்..!

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்கள்.. கைகளில் விலங்கிட்டு காங்கிரஸ் போராட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments