Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சூரனை வதம் செய்தார் முருகப்பெருமான்

Advertiesment
soorasamharam- murugan
, சனி, 18 நவம்பர் 2023 (17:15 IST)
கந்த சஷ்டி திருவிழாவையொட்டி இன்று திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் விழா நடைபெற்று வருகிறது.

தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் இங்கு லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.

வெகுசிறப்பாக நடைபெற்று வரும் இந்த நிகழ்ச்சியில் முதலில் யானை முகம் கொண்ட தாரகாசுரனை வதம் செய்தார்  சுவாமி ஜெயந்தி  நாதர். அதன்பின்னர்,   சிங்க முகம் கொண்ட சிங்கமுகாசுரனை சுவாமி ஜெயந்தி நாதர் வதம் செய்தார். மூன்றாவதாக மாமரமாக வந்த சூரபத்மனை சம்ஹாரன் செய்து  சேவலாகவும், மயிலாகவும் ஆட்கொண்டார்.

விண்ணைப் பிளக்கும் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்று பக்தர்கள் முழக்கமிட சூரபத்மனை முருகன் வதம் செய்தார். வதம் செய்த பின்னர்  கடற்கரையில் அமைந்துள்ள  மண்டபத்திற்கு செல்கிறார்.

இந்த   நிகழ்ச்சியையொட்டி, தீயணைப்புத்துறையினர் மற்றும் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

IND- AUS- இறுதிப் போட்டிக்கான VIP கட்டணம் ரூ.8 லட்சத்திற்கு விற்பனை