சச்சின் இதை செய்திருக்க மாட்டார்... சுமந்த் சி.ராமன் ட்விட்!

Webdunia
வியாழன், 4 பிப்ரவரி 2021 (13:42 IST)
சச்சின் டெண்டுல்கரின் ட்வீட்டைப் பகிர்ந்து கருத்து தெரிவித்திருக்கிறார் அரசியல் விமர்சகர் சுமந்த் சி.ராமன். 

 
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருவது உலகளவில் கவனம் பெற்றுள்ளது. இந்நிலையில் விவசாய போராட்டம் குறித்த செய்தி ஒன்றை தனது ட்விட்டரில் பகிர்ந்து அது குறித்து தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்  அமெரிக்க பாப் பாடகி ரிஹானா. இவரின் கருத்துக்கு ஆதரவுகளும் எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளனர். 
 
சச்சின் டெண்டுல்கர் தனது டுவிட்டர் பக்கத்தில், இந்தியாவில் தேசிய இறையாண்மையை சமரசம் செய்ய முடியாது. வெளிநாட்டில் வசிப்போர் பார்வையாளர்களாக மட்டும் இருங்கள், பங்கேற்பாளர்களாக மாற வேண்டாம். இந்தியர்களுக்கு இந்தியாவைப் பற்றித் தெரியும் என பதிவிட்டுள்ளார். 
 
இந்நிலையில், சச்சின் டெண்டுல்கரின் ட்வீட்டைப் பகிர்ந்து கருத்து தெரிவித்திருக்கும் அரசியல் விமர்சகர் சுமந்த் சி.ராமன், போராட்டத்துக்கு ஆதரவாக ட்வீட் செய்வது எப்படி நாட்டின் இறையாண்மையைக் கெடுக்கும்? சச்சின் டெண்டுல்கர் தன்னைத் தவிர யாருக்காகவும் நிற்காதவர். யாரேனும் ட்வீட் செய்யச்சொல்லி செய்திருப்பார். ஹீரோக்களாக நினைப்படுபவர்கள் பெரும்பாலும் அப்படியில்லை” என்று தெரிவித்திருக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவிடமிருந்து திருடிய சொத்துக்களை ஒப்படைக்க வேண்டும்.. வெனிசுலாவுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை..!

நடு ரோட்டில் கணவருக்கு மாரடைப்பு.. லிப்ட் கேட்டு கதறிய மனைவி.. யாரும் உதவாததால் பலியான உயிர்..!

வாய தொறந்து பேசுங்க!.. கம்முன்னே இருந்தா அரசியல்வாதியா?!.. விஜயை போட்டு பொளந்த அண்ணாமலை!.

60 ஏக்கரில் கார் பார்க்கிங்!.. 24 ஆம்புலன்ஸ்... ஈரோடு தவெக கூட்டத்துக்கு ஏற்பாடுகள்!...

தவெக தலைவர் விஜய் பிரச்சாரம்!.. ஈரோட்டில் பள்ளிக்கு விடுமுறை!...

அடுத்த கட்டுரையில்
Show comments