Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இனி ஆட்டோக்களில் 2 கி.மீக்கு ரூ. 20

Advertiesment
ஆட்டோ
, சனி, 15 ஜூன் 2013 (14:59 IST)
FILE
வரும் ஜூலை 2ஆம் தேதி முதல் ஆட்டோக்களில் மீட்டர்களை பொருத்தி 2 கி.மீட்டருக்கு ரூ.20 கட்டணம் வசூலிக்குமாறு ஆட்டோ ஓட்டுநர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

ஏ.ஐ.டி.யு.சி., சி.ஐ.டி.யு., எல்.பி.எஃப் தொழிற்சங்கங்களைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் பிரதிநிதிகளுடன் வீட்டு வசதிதுறை சார்ந்தோர் கலந்துகொண்ட கூட்டம் நேற்று தலைமைசெயலகத்தில் நடைபெற்றது. உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி ஒவ்வொரு ஆட்டோக்களிலும் மீட்டர்களை பொருத்த வேண்டும். கிலோ மீட்டர்களுக்கு ஏற்ப கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று உத்தரவை அமல்படுத்துவது குறித்து இதில் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது.

இந்த கூட்டத்தில், வரும் ஜூலை மாதம் 6ஆம் தேதிக்குள் கட்டாயமாக அனைத்து ஆட்டோக்களிலும் மீட்டர்களை பொருத்தியிருக்க வேண்டும் என்றும், முதல் 2 கி.மீட்டருக்கு ரூ.20 கட்டணமும், கூடுதல் கி.மீட்டர் ஒன்றுக்கு தலா ரூ.10 கட்டணமும் வசூலிக்க வேண்டும் என்றும் தமிழக அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டது.

Share this Story:

Follow Webdunia tamil