Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்- முதல்வர் மு.க.ஸ்டாலின்

mk stalin

Sinoj

, சனி, 6 ஏப்ரல் 2024 (16:41 IST)
நாட்டில் 18 வது மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் ஜுன் 1 ஆம் தேதி வரை   நடைபெறவுள்ளது. 
 
இதையொட்டி, இந்திய தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவின்படி  நாடு முழுவதும் தேர்தல் விதிமுறைகள் அமல்படுத்தட்டது.
 
இந்த நிலையில்,  பாஜக, காங்கிரஸ், திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தீவிர அரசியலில் ஈடுபட்டுள்ளன.
 
காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி  உள்ளிட்ட கட்சிகள் இந்தியா கூட்டணியில் இணைந்துள்ள நிலையில், பாஜகவுக்கு எதிராக தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
 
இந்த நிலையில், இன்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்ததுடன் அரசு ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று தெரிவித்துள்ளார்.
 
இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது; 

அதிமுக ஆட்சியின் கஜானாவை தூர்வாரி மாநிலத்தைக் கடும் நிதி நெருக்கடியில் விட்டுவிட்டுச் சென்றனர். எஸ்மா, டெஸ்மா கொண்டு வந்து நள்ளிரவு அரசு ஊழியர்களைக் கைது செய்ததும், அடக்குமுறை செய்ததும் தானே அதிமுக ஆட்சியின் அலங்கோலம்.
 
சில கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் தாமதம்தானே தவிர அவை நிராகரிக்கப்படவில்லை. ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் தமிழ்நாட்டின் நிதிநிலை விரைவில் சீராகும் என்று தெரிவித்துள்ளார்.
 
மேலும், அரசு ஊழியர்கள்,  ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற மனம் இருக்கிறது ; மார்க்கம் விரைவில் வரும் என்று அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முஸ்லீம் லீக் சித்தாந்தத்தை நினைவூட்டும் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை..! பிரதமர் மோடி விமர்சனம்..!