Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அண்ணாமலை விளம்பர அரசியல் செய்து வருகிறார்- கடம்பூர் ராஜூ

Sinoj
சனி, 10 பிப்ரவரி 2024 (16:55 IST)
விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால்  நாடு முழுவதும் உள்ள தேசிய கட்சிகளும், மாநில கட்சிகளும் தங்கள் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை ஆயத்தப்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் அதிமுகவுடன் கூட்டணி வைக்க விருப்பம் தெரிவித்திருந்தார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா. ஆனால், ஏற்கனவே பாஜக கூட்டணியில் இருந்து விலகிய அதிமுக  பாஜக மீது குற்றம்சாட்டி வருகிறது.

இதற்குப் பதிலடியாக அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகளும் பாஜக மீதும் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை மீது தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

இந்த நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ 10 ஆண்டு கால பாஜக ஆட்சியில் மக்கள் நலன் சார்ந்த எந்தவொரு பிரச்சனைகளுக்கும் தீர்வு காணவில்லை என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:

கடந்த 10 ஆண்டு கால பாஜக ஆட்சியில் மக்கள் நலன் சார்ந்த எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வு காணவில்லை. தேசிய கட்சிகள் எல்லாம் தமிழ்நாட்டின் நலனுக்கு எதிராக உள்ளன. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விளம்பர அரசியல் செய்து வருகிறார். அது தமிழ் நாட்டில் எடுபடாது என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்துக்கள் பாதுகாப்பாக இருக்கும் வரை முஸ்லிம்கள் பாதுகாப்பாக இருக்க முடியும்: யோகி ஆதித்யநாத்

நகராட்சியில் இருந்து மாநகராட்சியாக உயர்த்தப்படும் புதுச்சேரி: முதல்வர் அறிவிப்பு..!

தமிழகத்திற்கு தர வேண்டிய ரூ.4034 கோடி நிதி வரவில்லை: ஆர்ப்பாட்ட தேதி அறிவித்த திமுக..!

இன்று முதல் 5 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும்: சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அதிமுக - பாஜக கூட்டணி எதிரொலி: தனித்து போட்டியிட முடிவெடுத்தாரா விஜய்?

அடுத்த கட்டுரையில்
Show comments