Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஏலியன் போல் இருக்கும் இரட்டைப் பாண்டா குட்டிகள் - வீடியோ காட்சி

Advertiesment
ஏலியன்
ஏலியன் போல் காட்சி அளிக்கும் இரட்டைப் பாண்டா கரடிக் குட்டிகள், சீனாவில் பிறந்துள்ளன. புட்டிப் பால் குடிக்கும் அவை, இன்குபேட்டரில் வைத்துப் பாதுகாக்கப்படுகின்றன.
 
மிகச் சிறிதாக, முடியேதுமின்றி, பிறந்துள்ள இவற்றில் ஆண் குட்டி 146 கிராம் எடையும் பெண் குட்டி 117 கிராம் எடையும் இருந்தன. இவை, சீனாவில் செங்டு என்ற பகுதியில் உள்ள விலங்கியல் மையத்தில் பிறந்துள்ளன.
 
பெரிய பாண்டா கரடிகள், பொதுவாக ஒரு குட்டியை மட்டுமே கவனிக்கும் தன்மை கொண்டவை. இந்நிலையில் இரட்டைக் குட்டிகள் பிறந்தால், அவற்றில் ஒன்று மட்டுமே உயிர் பிழைக்கும். இம்முறை இரண்டு குட்டிகளையும் பிழைக்க வைக்க, அந்த மையத்தைச் சேர்ந்தவர்கள், புட்டிப் பால் கொடுத்து இரண்டு குட்டிகளையும் கவனித்து வருகிறார்கள்.
 
சின்னஞ்சிறிய பாண்டா குட்டிகள் அழகாக விளையாடுவதையும் புட்டிப் பால் குடிப்பதையும் இங்கே பாருங்கள்.
 

Share this Story:

Follow Webdunia tamil