Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பெரும் விமான விபத்தைத் தவிர்த்த விமானி (வீடியோ)

பெரும் விமான விபத்தைத் தவிர்த்த விமானி (வீடியோ)
, செவ்வாய், 8 ஜூலை 2014 (16:31 IST)
பார்சிலோனா விமான நிலையத்தில் விமானம் தரையிரங்கும் போது மற்றொரு விமானத்தை நோக்கிச் சென்றதைக் கவனித்துச் சாமர்த்தியமாக, பெரும் விபத்து நேராமல் விமானியால் தவிர்க்கப்பட்டது.
கடந்த சனிக்கிழமை ரஷ்யாவின் மாஸ்கோவிலிருந்து, யூ.டீ. ஏர் விமான நிறுவனத்தின் போயிங் 767-300 ரக விமானம் ஒன்று பார்சிலோனாவின் எல் பரட் விமான நிலையத்தில் தரையிரங்கிக் கொண்டிருந்தது. அப்போது, எதிர்பாரத விதமாக ஏய்ரோலினா அர்ஜெண்டினா நிறுவனத்தின் ஏல்ர்பஸ் ஏ 340-300 ரக விமானம் ஒன்று ஒடுபாதை நோக்கி வந்துகொண்டிருந்தது. அதை ரஷ்ய விமானிகள் கண்டுகொண்டனர். இருப்பினும் ரஷ்யா விமானிகள் விமானத்தைத் தரையிரக்க எத்தனிக்கையில் மேலும் அதிர்ச்சியாக ஏய்ரோலினா அர்ஜெண்டினாவின் ஏர்பஸ் விமானம் ஒடுபாதையை வேகமாக கடக்க முயன்றது. 
 
அதைக் கண நேரத்தில் உணர்ந்த ரஷ்யா விமானிகள், சமயோஜிதமாக தங்கள் போயிங் விமானத்தை மேல் எழச் செய்தனர். சற்று தாமதித்திருந்தால் இரண்டு விமானங்களும் மோதியிருக்கும். பின்னார் ரஷ்ய விமானம் 2ஆம் ஒடுபாதையில் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டது. அதன் பின்னார் ஏய்ரோலினா அர்ஜெண்டினாவின் விமானமும் பறந்து சென்றது. ரஷ்ய விமானிகளின் சமயோஜித நடவவடிக்கையால் பெரும் உயிர்ச் சேதமும் பொருள் சேதமும் தவிர்க்கப்பட்டன. 
 


நன்றி: யுடியூப் (YouTube)

Share this Story:

Follow Webdunia tamil