Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

காதலில் தோற்றதால் கார்களை துவம்சம் செய்த ஆண் யானை : வீடியோ

Advertiesment
காதலில் தோற்றதால் கார்களை துவம்சம் செய்த ஆண் யானை : வீடியோ
, செவ்வாய், 16 பிப்ரவரி 2016 (16:29 IST)
ஒரு பெண் யானையை அடைவதில் மற்றொரு ஆண் யானையுடன் தோற்றுப் போன ஒரு ஆண் யானை கோபத்தில் சுற்றுலா வாசிகளின் கார்களை துவம்சம் செய்த சம்பவம் சீனாவில் நடந்துள்ளது.


 
 
பொதுவாக, பெரும்பாலான விலங்குகளின் வாழ்க்கை முறையில், தனக்கு பிடித்த பெண் ஜோடியை தேர்வு செய்யும் போது, இன்னோரு விலங்கும் குறுக்கிட்டால், அங்கே பெரும் சண்டை நடக்கும். அந்த சண்டையில் எது வெற்றி பெறுகிறதோ அதற்கே அந்த பெண் ஜோடி. தோற்ற மிருகம் விலகி செல்ல வேண்டும். இதுவே விலங்குகளின் வாழ்க்கை முறை.
 
தெற்கு சீனாவில் உள்ள ஒரு பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில், ஒரு பெண் யானையை ஜோடியாக அடைவதற்காக இரண்டு யானைகள் சண்டையிட்டன. அதில் ஒரு ஆண் யானை வெற்றி பெற்று ஜோடியுடன் சென்று விட்டது. இதனால் கோபமடைந்த அந்த தோற்றுப்போன மற்றொரு யானை, அந்த பகுதியில் இருந்த சுற்றுலா வாசிகளின் கார்களை உடைத்து துவம்சம் செய்தது.
 
அந்த யானையின் தாக்குதலில், சுமார் 12 கார்களுக்கும் மேல் சேதமடைந்தது. இருந்தாலும், யானையை பார்வையிட வந்த சுற்றுலா வாசிகள், தங்கள் கார் சேதம் அடைந்து கொண்டிருந்த போது கூட, அந்த யானையின் தாக்குதலை ரசித்து வீடியோ எடுத்தனர்.
 
இருந்தாலும், யானையால் சேதமடைந்த கார்களுக்கு தகுந்த இழப்பீடு தருவதாக சீன அரசாங்கம் அறிவித்துள்ளது. 
 

Share this Story:

Follow Webdunia tamil