இந்திய கிரிக்கெட் அணியின் ஒருநாள் கிரிக்கெட் போட்டி கேப்டன் தோனி, சென்னைவாசிகளால் நம்ம தல தோனி என அழைக்கப்படும் இவர் இந்த பொங்கலை முன்னிட்டு பைக் நிறுவனம் ஒன்றின் விளம்பரதில் வேஷ்டி கட்டி அசத்தியுள்ளார்.
இதில் பிரபல நடிகரும் இயக்குனருமான பிரபுதேவாவுடன் தோனி வேஷ்டி சட்டையில் செம்ம ஆட்டம் போட்டுள்ளார். சென்னை சூப்பர்கிங்ஸ் அணியிலிருந்து 2 ஆண்டுக்கு வேறு அணிக்காக தோனி ஆடினாலும், வேஷ்டி சட்டையில் ஆட்டம் போட்டு நம்ம தல தோனி மீண்டும் சென்னை மக்களை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளார்.