Publish Date: Wed, 28 Oct 2015 (13:25 IST)
Updated Date: Wed, 28 Oct 2015 (13:32 IST)
பீகார் சட்டசபை தேர்தலில் 3 வது கட்டமாக இன்று 50 தொகுதிகளுக்கு வக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் வாக்களிக்க வரிசையில் நின்ற வயதான பெண் உட்பட 6 பேரை குரங்கு ஒன்று விரட்டி விரட்டி கடித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பக்தியார்பூரில் உள்ள ஒரு வாக்குச் சாவடியில் தான் இந்த குரங்கு வக்களிக்க வந்த பொது மக்களை கடித்துள்ளது, வரிசையில் நிற்கமுடியாமல் கீழே உட்காந்திருந்த ஒரு வயதான பெண்மணியை கடித்து ரத்தம் பார்த்த குரங்கு மேலும் 5 பேரை கடித்த பின்பு தான் அங்கிருந்து சென்றிருக்கிறது. இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வரும் இந்த வாக்குப்பதிவில் 11 மணிவரையில் 20 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.