Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்துக்களின் அபிலாஷை நிறைவேறும் நாள் நாளை - ஹெச்.ராஜா

Webdunia
செவ்வாய், 4 ஆகஸ்ட் 2020 (18:59 IST)
அயோத்தியில் கட்டுவோம்.அதே இடத்தில் கட்டுவோம். இந்துக்களின் அபிலாஷை நிறைவேறும் நாள் நாளை என  பாஜக தேசிய செயலர் ஹெ.ச்.ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அயோத்தியில் ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழா நடைபெற உள்ள நிலையில் எதிர்காலத்தில் ராமர் கோவில் எப்படியிருக்கும் என்ற எக்ஸ்க்ளூசிவ் படங்கள் வெளியாகியுள்ளது.

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா நாளை நடைபெற உள்ளது. இந்த விழாவிற்கு பிரதமர் மோடி, முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொள்ள உள்ளதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அதே சமயம் ராமர் கோவில் கட்டுமான பணிகளுக்காக பலர் தங்கம், வெள்ளி போன்றவற்றையும் நன்கொடையாய் வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் ராமர் கோவில் கட்டுமான பணிகள் தொடங்கி முழுவதுமாய் முடிவடைய மூன்றரை ஆண்டுகள் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மூன்றரை ஆண்டுகளுக்கு பிறகு முழுமையாக கட்டி முடிக்கப்பட்ட ராமர் கோவில் எப்படி இருக்கும் என்ற கிராபிக் புகைப்படங்களை ராமர் கோவில் கட்டுமான பணிகளை மேற்கொண்டு வரும் ஸ்ரீ ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அமைப்பு வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், பாஜக தேசிய செயலாலர் ஹெச்.ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது :

1989 ராம கரசேவை சமிதியின் செயலாளர் என்கிற முறையில் சிவகங்கை மாவட்டம் முழுவதும் ராம் ஜோதி ரதயாத்திரை மேற்கொண்டேன்.அப்போது இளைஞர்கள் எழுப்பிய கோஷம். கட்டுவோம், கட்டுவோம், ராமர் கோவில் கட்டுவோம். அயோத்தியில் கட்டுவோம்.அதே இடத்தில் கட்டுவோம். இந்துக்களின் அபிலாஷை நிறைவேறும் நாள் நாளை எனப் பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை மெட்ரோ திட்டத்தை டெல்லி நிறுவனத்திடம் ஒப்படைப்பது சமூக அநீதி: ராமதாஸ்

நவீன் பட்நாயக் வலது கையாக இருந்த ஐஏஎஸ் அதிகாரி விகே பாண்டியன் மனைவி ராஜினாமா..!

வக்பு வாரிய மசோதா விவாதத்தில் கலந்து கொள்ளாத ராகுல் காந்தி: குவியும் கண்டனங்கள்..!

செலவு கோடி ரூவாப்பே.. ஆனால் கோவில் நிலையோ பரிதாபம்! - காசி விஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு தடை!

வருஷம் 3 கோடி சம்பளம்.. வீடு, கார் சகல வசதிகளும்..! ஆனா யாரும் வரமாட்றாங்க! - ஆஸ்திரேலியாவில் ஒரு விநோத பகுதி!

அடுத்த கட்டுரையில்
Show comments