மனநல மருத்துவர் வேதமாலிகா - நேர்காணல்
நாம் பரபரப்பாக இயங்கும் பெரு நகர கலாச்சாரங்களில் வாழ்ந்து வருகிறோம், தினசரி வாழ்வு ஏற்படுத்தும் பிரச்சனைகளினாலும் நெருக்கடிகளாலும் இன்று, என்றுமில்லாத அளவிற்கு மன நோய்கள் அதிகமாகிவிட்டன, மேலும் மன நோய்க்கு மருந்து மாத்திரைகளும், முரட்டுத்தனமான சிகிச்சை முறையுமே சாசுவதம் என்று நம்பிக்கொண்டிருக்கிறோம், எந்த மருந்துகளுக்கும் கட்டுப்படாத சிக்கலான மன நோய்கள் சாதாரண மன சிக்கல்களிலிருந்து தோன்றுபவைகளே, இதற்கு புதிய புதிய மருத்துவ சிகிச்சை முறைகள் கண்டு பிடிக்கப்பட்டு வருகின்றன, அதில் ஹிப்னோ தெரபி மற்றும் பாரா ஹிப்னோ தெராபி முறைகள் மன நோய்களை தீர்க்கவல்லது என்று உலக சுகாதார அமைப்பு தனது ஆய்வில் தெரிவித்துள்ளது.
டாக்டர் வேதமாலிகா ஒரு மனநல ஹிப்னோ மருத்துவர். இவர் ஹிப்னோ தெரபி, Para Hypno Therapy, Past lite Therapy முறைகளை அமெரிக்காவில் கற்றுத் தேர்ந்து 20 ஆண்டுகளாக இத்துறையில் பணியாற்றி வருகிறார்.
மியாமி பல்கலைக்கழகத்துடன் இணைந்து ஆராய்ச்சி செய்தவர். சைக்கோ-மியூசிக் தெரபி என்ற இசை மருத்துவ ஆய்விலும் ஈடுபட்டவர். ஹிப்னோ தெரபி அன்ட் மென்டல் ஹெல்த் என்ற மாத இதழின் ஆசிரியராக பணியாற்றியவர். பல்வேறு வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் வழங்கியவர்.
ஹிப்னோ தெரபி என்பது மருந்தின்றி மனநோய்களை குணப்படுத்தவல்லது என்று உலக சுகாதார அமைப்பு உறுதி செய்துள்ளது. அத்தகைய ஹிப்னோ சிகிச்சை பற்றியும், உடல், மன நோய்கள் பற்றியும் வெப்உலகத்திற்கு டாக்டர் வேதமாலிகா தந்த நேர்காணலின் முதல்பாகம் வருமாறு. அடுத்தடுத்த பாகங்களை வரும் வாரங்களில் பிரசுரிக்க உள்ளோம்.
வெப்உலகம் : ஹிப்னோ தெரபி பற்றி கூறுங்களேன்?
டாக்டர் வேதமாலிகா : ஹிப்னோ தெரபிக்கு மனம்தான் அடிப்படை. மனம் என்பதை 3 விதமாக பொதுவாக பிரிக்கலாம். வெளி மனம் அதாவது இப்ப நாம பேசிக்கிட்டு இருக்கற Concious mind. பிறகு உள் மனம்னு சொல்லப்படுகிற Sub-concious mind. இதைத் தவிர இன்னொன்று உள்ளது. இது புதை மனம்.
ஹிப்னோ தெரபிலே 2 மனசை டீல் செய்கிறோம். வெளி மனம் பற்றி முதலில் சொல்லிவிடுகிறேன். நம்முடைய வெளி மனது அலைபாயும் குணமுடையது. அதை முதலில் கட்டுப்படுத்த வேண்டும். கட்டுப்படுத்திய பிறகு Sub-concious mind -ங்கற உள் மனது நோக்கி கவனம் செலுத்துகிறோம். ஏனெனில் நம்முடைய அனைத்து குணாம்சங்களுக்கும், மனோநிலைக்கும் உள் மனம்தான் காரணம். வெளி மனதை கட்டுப்படுத்துவது என்பது ஹிப்னோ தெரபி முறைல ரிலாக்ஸ் செய்ய வைப்பது, சற்றே தளர்த்துவது. பிறகு உள் மனதை அணுகுகிறோம்., இதைத்தான் ஹிப்னாடிசம் என்கிறோம்.
வெப்உலகம் : ஹிப்னாடிசம் - ஹிப்னோ தெரபி வேறுபாடு உள்ளதா?
டாக்டர் வேதமாலிகா : ஹிப்னாடிசம் - ஹிப்னோ தெரபி வேறுபாடு பற்றி கூறவேண்டுமென்றால் வெளி மனதை அமைதிப்படுத்தி உள் மனதை அணுகுவது ஹிப்னாடிசம்னு சொல்றோம்.
ஹிப்னோ தெரபில உள் மனதுக்கு தகுந்த கட்டளைகளை அதாவது Suggestion கேளை கொடுத்து உதாரணத்துக்கு இப்ப ஒருத்தருக்கு mental disorder இருக்கு என்று கண்டுபிடிக்க வேண்டும், எப்படி கண்டுபிடிக்கிறோம், முதலில் Body relaxation பிறகு mind relaxation உடலை அமைதிப்படுத்தி பிறகு மனது அமைதிப்படுத்தி உள் மனதோட பேச தொடங்குகிறோம். உள் மனசோட பிரச்சினைகளை தெரிந்து கொண்டு அதற்கான கட்டளைகளை இட்டு நோய் தீர்க்கறதுதான் ஹிப்னோ தெரபி என்று கூறுகிறோம். இதை 3 ஆகச் சொல்லலாம்.
1. ரிலாக்சேஷன் என்றால் உங்களுக்கே தெரியும். மனம் மற்றும் உடலை அமைதிப்படுத்துவது.
2. Regression அதாவது ஒரு பிரச்சினைக்கான காரணம், லைஃப்ல எப்பவோ நடந்த ஒரு நிகழ்ச்சியா இருக்கும். இப்பொழுது நாம் என்ன செய்கிறோம் நினைவை பின்னோக்கி செலுத்துகிறோம். அதாவது கடந்த காலத்தை நோக்கிப் போதல். அதாவது Hypno-regression முறையில் என்ன பிரச்சினை என்பதை தெரிந்துக் கொள்கிறோம்.
3. Suggestion : பிரச்சினை என்னவென்று தெரிந்த பின்னால் அதற்குத் தகுந்த கட்டளைச் சொற்களைக் கொடுத்துக் கொடுத்து அந்த நோயை தீர்க்க என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்கிறோம். அதாவது கட்டளைச் சொற்களை வெளி மனதுக்குக் கொடுத்தால் அது தங்காது, எனவே ஹிப்னோ தெரபியில் உள் மனதிற்கு பதியும்படி கட்டளைச் சொற்களை கொடுக்கிறோம்.
வெப்உலகம் : ஹிப்னோ சிகிச்சை மூலம் எந்த மாதிரியான மனநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியும்?
டாக்டர் வேதமாலிகா : இப்ப சாதாரண மக்கள்ங்கறவங்க நோயாளிகள் அல்ல. ஆனால் mental stress, மன இறுக்கம் தோன்றுகின்றன. ஆனால் மனநோயாளிகள் என்பவர்கள் உண்மையில் மனச்சிதைவு ஏற்பட்டவர்கள். முதலில் நாம் சாதாரண மக்களில் இருந்தே தொடங்குவோமே. ஒரு 4 வயசுக் குழந்தைக்குக் கூட சில பிரச்சினைகளை பெற்றோர்கள் கூறுவதைப் பார்க்கிறோம்.
அதாவது சொல்ற பேச்சை கேக்கறதில்ல, ஒழுங்கா படிக்கிறதில்ல, சாப்பிடறதில்ல அப்டீன்னு சொல்வாங்க. நீங்கள் கேட்கலாம். ஒரு சின்ன குழந்தைக்கு என்ன stress இருக்க முடியும் என்று கேட்கலாம். ஆனா இன்னிக்கு சின்னக்குழந்தைகளுக்கு ளவசநளள அதிகமாக இருக்கிறது. உதாணரமாக பள்ளிகள்ல புக்ஸ் தூக்குவது மட்டுமல்லாமல் பாடத்திட்டங்களும் அதிகமாக இருக்கிறது.
எக்கச்சக்கமா ஹோம் ஒர்க் கொடுக்கறாங்க. பெற்றோர்களும் தங்கள் குழந்தைகள் படிக்க வேண்டும். முன்னுக்கு வர வேண்டும் என்று நினைக்கிறார்கள். குழந்தைகளுக்கும் இன்றைக்கு அமைதியான சூழல் தேவைப்படுது. பள்ளியிலிருந்து வந்தவுடன் ரிலாக்ஸ் செய்ய அவகாசம் கொடுத்துவிட்டு அடுத்த வேலை கொடுத்தால் சிறந்தது. வந்தவுடனேயே இதைச் செய் அதைச் செய் என்றால் வெறுப்புதான் ஏற்படும்.
எனவே நாம் குழந்தை மனோ நிலையை புரிந்து கொள்ள வேண்டும். விளையாடச் சொல்ல வேண்டும். பிறகு டிபன் கொடுத்துவிட்டு சற்று நேரம் கழித்து படிக்கலாமா? என்பதுபோல் கேட்டால் குழந்தைகளுக்கு படிப்பு மேல் வெறுப்பு ஏற்படாது. பெற்றோர்கள் இதைச் செய்வதேயில்லை. நல்லெண்ணம் இருக்கலாம். ஆனால், இதை விட குழந்தையின் மனநலம் தான் முக்கியம் என்பதை உணரவேண்டும். ஆனால், தற்பொழுது பெற்றோர்கள் என்ன புகார் கூறுகிறார்கள் என்றால், குழந்தைகள் டி.வி. பார்க்கின்றனர், படிப்பதில்லை, மக்காக இருக்கிறது என்று கூறுகிறார்கள்.
குழந்தைகள் டி.வி.ல பொதுவாக கார்ட்டூன்களை பார்க்கின்றன. ஏன் குழந்தைகள் கார்ட்டூன்களை ரசிக்கின்றன என்று பார்த்தோமானால், கார்ட்டூனில் நாய் பேசுகிறது, பூனை பேசுகிறது, மரம் பேசுகிறது. இதை குழந்தைகள் ரசிப்பது வெறும் ஆர்வத்தினால் மட்டுமல்ல, பெற்றோர்கள் வேலைக்குச் சென்றுவிடுகின்றனர். பள்ளி விட்டு திரும்பிய பிறகு தனிமையில் இருக்கும் குழந்தைகள் பேசக் கூட ஆளில்லாமல் தவிக்கும்போது பேசும் விலங்குகள், பேசும் தாவரங்கள் என்று வரும் கார்ட்டூன் நிகழ்ச்சிகளில் தனது இச்சையை பூர்த்தி செய்து கொள்கிறது. பேசாத மனிதர்களுக்கு நடுவே பேசும் பொருட்கள் விலங்குகளில் தன்னை அடையாளப்படுத்திக் கொள்கின்றன.
என்னிடம் இது போன்ற ஒரு குழந்தையை அழைத்து வந்தார்கள். பரிசோதனை செய்துபார்த்த போது அந்த குழந்தையிடம் நல்ல புத்திக்கூர்மை இருந்தது. ஆனால், பள்ளிக்குச் சென்று படிக்க விருப்பமில்லை. ஏனென்று காரணம் கேட்டபோது, யாரோ டீச்சர் தன்னை அடித்துவிட்டதாக தெரிவித்தது. இது அந்தக் குழந்தையின் உள் மனதில் தீவிரமாக பதிந்திருக்கிறது. அதனால் பள்ளி என்றாலே ஒரு வெறுப்புணர்வு ஏற்பட்டுவிட்டது. ஹிப்னோ தெரபி மூலம் இத்தகைய குழந்தைகளின் உள் மனதில் கட்டளைகளை இட்டு மீண்டும் நார்மல் நிலைக்கு கொண்டு வர முடியும்.
கொஞ்சம் வளர்ந்த அதாவது +1, +2 படிக்கும் மாணவர்களை எடுத்துக் கொண்டால் அந்த வயதில் நிறைய attention தேவைப்படும். இப்போது பார்த்தீர்களானால் நிறைய பேர் Drug addictiony போய்விடுகிறார்கள். ஏனெனில் வீட்டில் அவர்களுக்கு அங்கீகாரம் கிடைப்பதில்லை. அடையாள நெருக்கடிகள் ஏற்படுகின்றன. தீவிரவாதிகள்னு நாம சொல்ற சிலர் உருவாவதற்கும் இதே போன்ற அங்கீகாரமில்லாமை காரணமாக இருக்கலாம். ஒரு சின்னக் குழந்தையை நாம் பாராட்டுகிறோம். இந்த பாராட்டு கிடைக்காதபோது இதற்கு பதிலாக வேறு ஒன்றை அவர்கள் வெளியில் தேடிக் கொள்கின்றனர்.
மாணவர்கள் ஏன் போதைக்கு அடிமையாகின்றனர் எனில் பல சமயங்களில் அவர்கள் எதிர்பார்க்கும் உற்சாகமும், பாராட்டும், தூண்டுதலும் பெற்றோர்களிடமிருந்து கிடைப்பதில்லை. இதை மறக்க மாணவர்கள் கெட்ட நண்பர்களுடன் சேருகின்றனர். போதைப் பழக்கம் ஏற்படுத்திக் கொள்கின்றனர். வீட்டில் அம்மா, அப்பா இருவரும் வேலைக்குச் செல்கின்றனர். வீட்டிற்கு வரும் குழந்தைகள் தங்கள் வேலையை தாங்களே செய்து கொள்ள வேண்டியுள்ளது. இப்ப இந்த குழந்தைகளுக்கு பொழுதுபோக்கு என்ன இருக்கிறது? எவ்வளவு நேரம் டி.வி. பார்த்துக் கொண்டிருக்கும். அதனால நண்பர்களை நோக்கி செல்கின்றன. இவர்கள் நல்ல நண்பர்கள், இவர்கள் கெட்ட நண்பர்கள் என்றெல்லாம் பார்க்க முடியாமல் கிடைத்தவர்களை பற்றிக் கொள்கின்றனர். இவர்கள் அவர்களை போதைக்கு பழக்கலாம். இதுபோன்று வளர்ந்த நிலையில் உள்ள மாணவர்களுக்கு ஹிப்னோதெரபி மூலம் நிலைக்கு கொண்டு வருகிறோம். அதாவது தவறான பாதைக்குச் சென்ற மனதை மீண்டும் பொருத்தமான கட்டளைகள் மூலம் நல்ல நிலைக்கு திருப்புவதில் ஹிப்னோ தெரபி பயன்படுகிறது.
அதேபோல் வேலைக்குச் செல்பவர்கள் பல்வேறு பிரச்சினைகள் காரணமாக வேலையில் கவனம் செலுத்த முடியவில்லை என்கின்றனர். எங்களுக்கு பின்னாடி இருக்கிறவங்க பிரமோஷன் வாங்கிக் கொண்டு செல்கின்றனர் என்று கூறுகின்றனர். இதனால் ஏற்படும் மன அழுத்தம் காரணமாக நிம்மதியிழக்கின்றனர். அவர்களுக்கும் இந்த ஹிப்னோ தெரபி பயன்படுகிறது. குறிப்பா சாஃப்ட்வேர் துறையில் இருப்பவர்கள் இரவு அதிக நேரம் வேலை செய்கின்றனர். இதனால் தூக்கம் கெடுகிறது. இதனால் இரவு நேரத்தில் நம் உடலில் சுரக்கும் செரடோனா சுரப்பிகள் சுரப்பதில்லை. இதனால் உடல், மனப் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. எனவே, தினசரி வாழ்வில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளால் உந்தப்படும் மன அமைதியின்மைக்கு ஹிப்னோ தெரபி பெரிதும் பயன்படுகிறது.
விளம்பரத் துறைகள்ல ஹிப்னாசிஸ் முறையைத்தான் கையாள்கிறார்கள். விளம்பரம் எப்படி செய்கிறார்கள் என்று பார்த்தால், ஒரு க்ஷசயனேஐ திரும்பத் திரும்பச் சொல்கிறார்கள். இதனால் அதன் பெயர் நம் உள் மனதில் பதிகிறது. எனவே ஏதாவது ஒரு பொருள் வாங்க வேண்டுமென்றால் நமக்கு உடனே அந்த பிராண்ட் ஞாபகத்திற்கு வருவது ஒரு வகையில் பார்த்தால் ஹிப்னாடிச முறைகளிலேயே.