Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மனநல மருத்துவர் வேதமாலிகா - நேர்காணல்

மனநல மருத்துவர் வேதமாலிகா - நேர்காணல்

Webdunia

இதைத்தான் நாம் சைக்கோ-மியூசிக் ஹிப்னோதெரபி என்கிறோம். அமிர்தவர்ஷினி ராகம் பாடினா மழை வரும்னு சொல்றோம். ஏனெனில் அந்த ராகம் தண்ணீர் சம்பந்தப்பட்ட ஒன்று. இதனால் சிறுநீர்க் குழாய் சம்பந்தமான நோய்களுக்கு சிகிச்சை அளிக்க முடியும். வெறும் இசை மட்டும் போதாது, மனசில் இருக்கும் பிரச்சினைகளை sub-concious லிருந்து வெளியே கொண்டு வந்து ராகத்தையும் இசைத்து கட்டளைகளையும் கொடுக்கும் போதுதான் சிகிச்சை முழுமை பெறுகிறது.

இருதயப் பிரச்சினை, முதுகுவலி, நரம்புத் தளர்ச்சி ஆகியவைகளும், சைக்கோ-சொமேட்டிக் நோய்கள்தான். உணர்ச்சி கொந்தளிப்பு நரம்பு மண்டலத்தை நிச்சயமாகத் தாக்கும். என்னிடம் வந்த ஒரு மாணவனின் பிரச்சினையை இதற்கு உதாரணமாகக் கூறலாம். அவனுக்கு பரீட்சை சமயத்தில் குறைவாக மார்க் எடுத்தால் தந்தை தண்டிப்பார் என்ற பயமும், தான் படிக்க வேறு இல்லை, இந்த உணர்வு நிலையிலேயே உறங்கச் சென்ற அந்த மாணவனுக்கு கை உணர்விழந்து, செயலிழந்துவிட்டது.

என்னிடம் அழைத்து வந்தபோது ஹிப்னோசிஸ் செய்து பார்த்தோம். உள் மனது என்ன கூறியது என்றால் இந்தப் பிரச்சினையையே நான் தான் வரவழைத்தேன் என்றது. அதாவது பரீட்சை எழுதினால் ஃபெயில், இதனால் அப்பா அடிப்பார், எனவே கை வராமல் போனது. எனக்கு நிம்மதியாக இருக்கிறது. இது சாபம் அல்ல. இது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது என்று உள் மனம் கூறியது. எனவே, அவனது கை செயலிழந்ததற்கு உடல் சிகிச்சை நிச்சயமாக பலன் அளித்திருக்காது. ஹிப்னோதெரபியில் அந்த மாணவனை குணமாக்கி அனுப்பினோம். தோல் நோய்கள், தற்காலிக பார்வையிழப்பு, தூக்கமின்மை, தைராய்டு, உடற்பருமன், சிறு வயதிலேயே முதிய தோற்றம் ஆகியவை சைக்காலஜிக்கல் பிரச்சினைகளே.

வெப்உலகம் : மருத்துவ துறைல ஹிப்னோசிஸ் தற்போது எந்த அளவுக்கு பயன்படுத்தறாங்க? சில பேர் இது " out moded " என்று கூறுகிறார்களே? உங்கள் கருத்து என்ன?

டாக்டர் வேதமாலிகா : நிச்சயமாக " out moded " கிடையாது. டாக்டர்கள் ஏன் இதை தேர்ந்தெடுப்பதில்லையெனில் இது நீண்ட நேரம் பிடிக்கும் சிகிச்சை முறையாகும். ஒரு டாக்டர் பார்த்தீங்கன்னா ஒரு நோயாளியுடன் 10 அல்லது 15 நிமிடம் செலவு செய்கிறார். ஹிப்னோதெரபில 1 மணிநேரம் அல்லது 2 மணிநேரம் கூட செலவு செய்ய வேண்டி வரும். இதனால் இது Energy-consuming, Time-consuming. இந்த நேரத்துல 7 அல்லது 8 பேஷன்ட்ச பார்க்கலாம் அப்டீங்கற மனோநிலைதான் இருப்பதால், இதை தவிர்க்கின்றனர்.

இரண்டாவது ஹிப்னோடிசத்தையும், ஹிப்னோதெரபியையும் குழப்பிக் கொள்கின்றனர். இரண்டுமே வேறு வேறு. யு.கே, யு.எஸ், ஐரோப்பா போன்ற கண்டங்களில் ஹிப்னோதெரபி குறித்த பிரக்ஞை இருக்கிறது. இந்தியாவில் குறிப்பாக வட இந்தியாவில் ஹிப்னோ பற்றிய விழிப்புணர்வு இருக்கிறது. தமிழகத்தில் இது பற்றிய விழிப்புணர்வு இல்லை.

முற்பிறவியில் ஏற்படும் பயங்கள் இந்தப் பிறப்பில் ஏற்படும் மனநோய்களுக்கு காரணமாக இருக்கிறது என்று கண்டுபிடித்துள்ளார்கள்.

நம் புராணம், இதிகாசம் இதிலெல்லாம் நாம் கேள்விப்பட்டுள்ளதை தற்போது மருத்துவ ரீதியாக நிரூபித்துள்ளார்கள். இதை முதன்முதலில் கண்டுபிடித்தவர் மியாமி பல்கலைக்கழக மருத்துவர். இது போன்ற மனநோயால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணை இவர் எதிர்கொண்டார். ஒரு பெண்ணிற்கு தண்ணீர் என்றாலே பயம். குளிக்கக் கூட அச்சம். இதற்கு மருந்து மாத்திரைகள் என்று சில ஆண்டுகள் கொடுத்தும் பலனில்லை. அப்போது ஹிப்னோ சிகிச்சை முறையை பயன்படுத்தினார். இந்த நோயின் தொடக்கம் எது என்று அறிய ஹிப்னோ-ரிக்ரஷன் முறையைக் கையாண்டு அவரை கடந்தக் காலத்தை நோக்கி அழைத்துச் சென்றார்.

அப்போது அந்தப் பெண் தனக்கு இந்தப் பிரச்சினை 1890 ஆம் ஆண்டு ஏற்பட்டதாகக் கூறியபோது அதிர்ச்சி ஏற்பட்டது. 100 ஆண்டுகள் கழித்து எப்படி இது! என்று அந்த மருத்துவர் இதை கற்பனை என்றுதான் கணித்தார். ஆனால் 1890 ஆம் ஆண்டு தனது கிராமமே தண்ணீரில் அடித்துச் சென்றபோது தானும் அதில் இறந்ததாக அப்பெண் கூறினாள். அதனால்தான் தண்ணீரைக் கண்டு பயம் என்றாள்.

உடனே மருத்துவர் நம்பவில்லை. அது எந்த கிராமம் எந்த வருடம்? போன்ற விவரங்களைக் கொண்டு அது போன்ற சம்பவம் உண்மைதானா? என்று அறிய சில தகவல்களைத் திரட்டியபோது வெள்ளத்தில் அந்த கிராமம் அழிந்தது உண்மைதான் என்பதற்கு நிரூபணம் கிடைத்தது. அதன் பிறகு சிகிச்சை அளிக்கப்பட்டது. எனவே முற்பிறவி பயங்கள், நாம் உயிரிழக்கும் போது ஏற்படும் பயங்கள் அடுத்த பிறவியிலேயும் தொடர்கிறது. வெறும் பயம் மட்டுமல்ல, முற்பிறவித் திறமைகளும் தொடர்ச்சியாக அமைவதையும் நாம் பார்க்கலாம்.

என்னிடம் ஒரு நோயாளியை அழைத்து வந்தார்கள். அதாவது அவன் ஒரு மாணவன், படிப்பில் நாட்டமில்லாமல் தான் இன்னும் கொஞ்ச நாள்ல இறந்துவிடுவோம், அதனால படிச்சு என்ன செய்யப் போகிறோம் என்ற ரீதியில் பேசிக் கொண்டிருந்தார். சிகிச்சை செய்து பார்த்தபோது இதுவரைக்கும் விபத்து மூலமாகத் தான் மரணம் அடைந்ததாகவும், இந்த பிறவியிலேயும் அப்படித்தான் மரணம் அடைவோம் என்று அசையாத நம்பிக்கை இருந்தது தெரிய வந்தது. பிறகு முற்பிறவில நடந்தது திரும்ப நடக்கணும் அப்டீங்கற அவசியம் இல்ல அப்டீன்னு கட்டளைகளை கொடுத்து மெதுவா நார்மல் மனிதனா மாற்றினோம்.

வெப்உலகம் : மன நோய்க்கான அடிப்படை அறிகுறிகள் என்ன?

டாக்டர் வேதமாலிகா : பாதுகாப்பின்மையும், பயமும் சேர்ந்து மனநோய் ஏற்படுகிறது என்று கூறுவோம். அந்த பயம் மற்றும் நோய்கள் பற்றி நாம் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளோம்.

வெப்உலகம் : மருந்துகளால் தீர்க்கப்படும் மனநோய், ஹிப்னோதெரபியில் தீர்க்கப்படும் மனநோய்கள் இரண்டிற்கும் உள்ள வேறுபாடு என்ன?

டாக்டர் வேதமாலிகா : அடிப்படையில் மனநோய் ஏன் வருகிறது என்று பார்க்க வேண்டும். ஒன்று உடலில் ஏற்படும் ரசாயன மாற்றங்களால் ஏற்படும் மனநோய்கள். இதற்கு மருந்து மாத்திரை சிகிச்சை பலனளிக்கும். இரண்டாவது, சூழ்நிலை பாதிப்புகளால் ஏற்படும் மனநோய்கள். இதற்கு எந்த மருந்து கொடுத்தாலும் பலன் ஏற்படாது.

சூழ்நிலை பாதிப்புகளால் ஏற்படும் ஞளலhடி-ளுடிஉயைட னுளைடிசனநசகளுக்கு அதன் வேர் எங்கு இருக்கிறது என்பதை கண்டுபிடித்துதான் சிகிச்சை அளிக்க வேண்டும். ஹிப்னோதெரபில மருந்து கொடுக்கப்படறதுல மருந்துகளால் மனநோயின் விளைவுகள் கட்டுப்படுத்த முடியுமே தவிர மனநோயை தீர்க்க முடியாது. முரட்டுத்தனமா ஊசி, மருந்து, அதிர்ச்சி மருத்துவம்னு அடக்க முயல்கிறபோது நரம்புகள் தளர்வடைகின்றன. மருந்துகளால் உருவாகும் நோய்களுக்கு சிகிச்சையளிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இதனாலேயே நாங்கள் மருந்தில்லா உலகம் னுசரபடநளள றுடிசடனஐ உருவாக்க முயற்சி செய்து வருகிறோம்.

வெப்உலகம் : மனநோயின் எந்த கட்டத்தில் ஹிப்னோதெரபி தொடங்க வேண்டும்?

டாக்டர் வேதமாலிகா : ஆரம்ப கட்டத்திலேயே செய்யலாம். ஆனால் யாரும் ஆரம்பத்திலேயே வருவதில்லை. அவர்களுக்கு ஹிப்னோதெரபி குறித்து எதுவும் தெரிவதில்லை. சற்று நிலைமை மோசமடைந்தவுடன் அதாவது ஒரு 10 அல்லது 12 வருடம் கழித்தே வருகின்றனர். ஆரம்பத்திலேயே ஹிப்னோதெரபி செய்தால் மேலும் வளராமல் முற்றிலும் குணமாக்க முடியும். அதே போல் மிகவும் மோசமடைந்த நிலையில் ஹிப்னோதெரபி பயன் தராது. ஏனெனில் Concentration தேவைப்படும். இரண்டாம் கட்ட மனச்சிதைவு நோய்களை ஹிப்னோதெரபி குணமாக்கிவிடும். ஆனா தான் யார் என்றே தெரியாத அளவுக்கு முற்றிப் போய்விட்ட நிலையில் ஹிப்னோதெரபி பயன் தராது.

வெப்உலகம் : Psycho-Social என்று நீங்கள் கூறுவதால் ஒரு கேள்வி, தற்போது பெண்கள் பெரும்பாலும் மெகா சீரியல்களை விடாமல் பார்த்து ரசிக்கின்றனர். ஒரு சில சீரியல்கள் பெண்களிடம் ளுவசநளள என்கிற மன இறுக்கத்தை ஏற்படுத்துகிறது என்பது உண்மைதானா? உங்கள் கருத்து என்ன?

டாக்டர் வேதமாலிகா : இது ஓரளவுக்கு உண்மைதான். மெகா சீரியல்ல என்ன நடக்கிறது எப்ப பார்த்தாலும் ஒரே அழுகை. ஏற்கனவே நமக்கு Stress, Depressions இருக்கு. அதோடு இதைப் பார்க்கும்போது உள்மனதுல பாதிப்பை ஏற்படுத்துகிறது. சிலவகை சீரியல்கள் பாசிட்டிவா இருக்கு. கஷ்டப்படற ஒரு பொண்ணு உழைத்து முன்னேறி நல்ல நிலைமைக்கு வர்றது போன்ற அதாவது "சித்தி" ரக சீரியல்கள் இருக்கிறது. இதுவல்லாமல் குடும்பப் பிரச்சினை, கணவன் கொடுமை, மாமியார் கொடுமை இவைகளை மேலதிகமாக காண்பிக்கும் பொழுது Stress ஏற்படுவது உண்மையே. மென்டலாக்கும் மெகா சீரியல்கள்னுதான் நாங்க கேலியா குறிப்பிடுவோம்.

வெப்உலகம் : பொதுவாக மனதை ஆரோக்யமாக வைத்துக்கொள்ள உங்களது ஆலோசனைகளைக் கூற முடியுமா?

டாக்டர் வேதமாலிகா : முதலில் ரொம்ப கவலைப்படுவதை தவிர்க்க வேண்டும். நாம் கவலைப்படாமல் இருக்க முடியாது. ஆனால் 24 மணிநேரமும் ஒரே கவலையா இருப்பதை கூடிய வரையில் தவிர்க்க வேண்டும். ஏனெனில் கவலையேதான் நம் வாழ்க்கைன்னு மனம் பிடிவாதமா நம்ப ஆரம்பிச்சுடும். இதனால தூக்கமின்மை ஏற்படும். தூக்கம் இல்லைன்னா "செரடினோ" என்ற முக்கிய சுரப்பி சுரக்காது. இதனால சில மனநோய்கள் ஏற்படும்னு நான் ஏற்கனவே குறிப்பிட்டிருக்கிறேன்.

இரண்டாவதாக நன்றாகத் தூங்கும்போதுதான் உள்மனம் நமக்கிருக்கிற பிரச்சினைய நினைச்சுப்பாக்குது, Sub-concious has a correction with a super concious. அதனால அப்படிப் போய் தான் அந்தப் பிரச்சினையைத் தீர்க்க முடியும். அதனால தூங்குவது அவசியம்.

இரண்டாவதாக ரிலாக்சா இருக்கணும். எப்பப் பார்த்தாலும் வேலை வேலைன்னு வேலைப் பித்து பிடித்து அலையக் கூடாது. பெற்றோர்கள், குழந்தைகள், மாணவர்கள், ஆசிரியர்களிடையே கம்யூனிகேஷன் இடைவெளியே இருக்கக் கூடாது. பொழுதுபோக்குக்கு அதிக நேரம் செலவழியுங்கள். பொதுவா டுடிஎந யனே யககநஉiடிn மனநோய்களை அகற்றும். பாரதியார் சொல்றத பாருங்க.

"துன்பமும் சோர்வும், நோயும் பயமுமெல்லாம
அன்பில் அழியுமடி கிளியே...
அன்பிற்கு அழிவில்லை காண்..."

எனவே அன்பு இருந்தா ளiஉமநேளள ஏற்படாது. இதான் எல்லோருக்கும், எல்லாவற்றிற்கும் அடிப்படை என்பதை உணர வேண்டும்.

வெப்உலகம் : எப்படிப்பட்ட பேஷண்ட்ஸ்களுக்கு ஹிப்னோ தெரபி பயன் தரும்னு கொஞ்சம் விளக்குங்களேன்?

டாக்டர் வேதமாலிகா : மனச்சோர்வு, அர்த்தமற்ற புரியாத பயங்கள், தாழ்வு மனப்பான்மை, குற்ற உணர்ச்சிகள், தற்கொலை எண்ணங்கள், தன்னம்பிக்கையின்மை, வாழ்க்கையில் பிடிப்பின்மை, பதட்டமான மனநிலை, பிரம்மைகள், காதில் கேட்கும் மாயக்குரல்கள் அதன் மிரட்டல்கள், இல்லாத உருவங்கள், அருவருப்புக் காட்சிகள் கண்முன் தெரிதல், வேலை, கல்வியில் ஈடுபாடின்மை. இதெல்லாம் நாம் உலகத்துக்கு வந்த பிறகு பல்வேறு காரணங்களால் தோன்றும் மனநோய் அறிகுறிகள்.

ஆனால், இந்த உலகத்துக்கு வர்றதுக்கு முன்பே கருவிலேயே குழந்தைகளுக்கு மனபாதிப்பு ஏற்படுகிறது என்று ஆஸ்டரேலியா, சிட்னியில் உள்ள நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர். மேலும் obsessive compulsive disorder அதாவது ஒரே எண்ணம் திரும்பத் திரும்ப வந்துபோதல், ஒரே காரியத்தை திரும்பத் திரும்பச் செய்தல், இந்த எண்ணம் தவறு என்று அவர்களுக்குத் தெரியும். ஆனால், அதை கட்டுப்படுத்த முடியாது, இதனால அடிக்கடி கைகழுவுதல், குளித்தல் என்று தன்னை சுத்தமாக்கிக் கொள்வதாக நினைத்துக் கொள்வார்கள்.

அதேபோல் செக்சுவல் பிரச்சினைகள் இருக்கும். அதாவது Self-sex, Homo-sex இதெல்லாம் இருக்கும். கணவன்-மனைவியிடையே பரஸ்பர சந்தேகம், ஞாபக மறதி பிறகு இதில் முக்கியமான ஒன்று சேடிசம் எனப்படும் பிறரைத் துன்புறுத்தி இன்பம் காணுதல். இதையெல்லாம் கூட ஹிப்னாசிஸ் சிகிச்சையில் குணப்படுத்தலாம். பிறகு Day-dreaming என்கிற பகல் கனவு, பிறகு சிலருக்கு எதைப் பார்த்தாலும் ஏற்படும் பயம், ஹிஸ்டீரியா போன்ற அநவேயட னளைடிசனநசகளை ஹிப்னாசிஸ் குணப்படுத்துவதோடு மனநோய் சம்பந்தமான உடல் நோய்களையும் ஹிப்னோ தெரபி குணப்படுத்தும். இதை நாம் பிறகு பார்ப்போம்.

வெப்உலகம் : உடல் நோய்களுக்கும், மன நோய்களுக்கும் உள்ள தொடர்பு பற்றி கொஞ்சம் விளக்கமாக கூறுங்களேன்?

டாக்டர் வேதமாலிகா : உடலுக்கும், மனதிற்கும் நிச்சயமாக தொடர்பு உள்ளது. sub-concious என்கிற உள்மனம், இதன் கட்டுப்பாட்டில்தான் தானியங்கி நரம்பு மண்டலங்கள் செயல்படுகிறது. அதனால உள் மனது பாதிக்கப்படுகிறபோது உடல்ரீதியான பிரச்சினைகள் தோன்றும். இதற்கு Psycho-somatic disorderD பேர் வைத்திருக்கிறோம். இதற்கு சிறிய உதாரணம் சொல்ல வேண்டுமானால் "அல்சர்". நாம் நினைப்பது போல் பசிக்கும் போதுதான் வயிற்றின் ஹைட்ரோ குளோரிக் அமிலம் சுரக்கும் என்பதில்லை. நாம் கவலைப்படும்போதும், பதட்டப்படும்போதும், அமிலம் சுரக்கும். இதற்கு நாம் மருந்து மாத்திரைகள் மட்டும் எடுத்துக் கொண்டால் போதாது. பயம், பதட்டம் ஏற்படும் மனக் காரணங்களையும் கணக்கில் எடுத்துக் கொள்வதில் ஹிப்னோ சிகிச்சை பொருத்தமானது என்று கூறலாம்.

இதுபோன்ற மனத் தொடர்பான உடல் நோய்கள் ஏராளமாக உள்ளன. உதாரணமாக திக்குவாய், ஃபிட்ஸ், நரம்புத் தளர்ச்சி, வயிறு, ஜீரணக் கோளாறுகள், மைக்ரேன் என்ற ஒற்றைத் தலைவலி, ரத்த அழுத்தம், அதேபோல் டயாபடீஸ் உடல்நோய் அல்ல மனத்தில் அதிக பிரச்சினைகள் தோன்றும்போது தான் டயாபடீஸ் தோன்றுகிறது. இதற்கு நாங்கள் ஹிப்னோ தெரபியுடன், மியூசிக் தெரபியும் அளிக்கிறோம். சில ராகங்களுக்கு நோய் தீர்க்கும் சக்திகள் இருக்கின்றன. உதாரணமாக கர்நாடக இசையில் "சூர்யகாந்தம்" என்று அழைக்கப்படும் ராகம் சர்க்கரை நோயை குணப்படுத்தக் கூடியதுன்னு கண்டுபிடிச்சுருக்காங்க. அந்த ராகத்தைக் கேட்பதோடு மன சஞ்சலத்திற்கான காரணங்களையும் கண்டுபிடித்து, ஹிப்னோ சிகிச்சை மூலம் கட்டளைகளையும் செலுத்தினோமானால் ஹிப்னோ சிகிச்சையையும், இசை சிகிச்சையையும் இணைத்து கொடுத்தால் பலன்கள் பிரமாதமாக இருக்கிறது.


Share this Story:

Follow Webdunia tamil