பொதுவாக அலைபாயும் வயது என்பது பதினென் பருவத்தில் ஆண்/பெண் இருபாலருக்கும் இருக்கும். இந்தக் காலக் கட்டம் இரு பாலருக்குமே மிகவும் முக்கியமான காலம் ஆகும்.
பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு தொடங்கி முதல் காதல், இனக்கவர்ச்சி, அதிகமான விஷயங்களைக் கற்றுக் கொள்தல் அல்லது கற்றுக்கொள்ளத் துடித்தல், தேடல் ஆர்வம் போன்றவை 11 வயது தொடங்கி 22 வயதுக்குள் வரும்.
பெண்கள் எனில் பருவமடைதல் (பூப்பெய்தல்) நிகழ்வும் 11 வயதுக்குப் பிறகே நிகழக்கூடியது. மனோவலிமை குறித்த விஷயத்தைப் பொருத்தவரை பெண்கள், ஆண்களைக் காட்டிலும் முதிர்ச்சியடைந்தவராக இருக்கிறார்கள்.
20 வயதுடைய ஆண்களையும், பெண்களையும் ஒப்பிடுகையில், ஆண்களை விடவும் பெண்கள் தெளிவான- உறுதியான மனோநிலையைக் கொண்டிருக்கிறார்கள் என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
மனதளவில் முதிர்ச்சி பெறும் வயது 11 - 20 என்பதால், பெற்றோர் இந்த வயதுடைய குழந்தைகளை தீவிரமாக கண்காணித்து பராமரித்தல் அவசியம்.
தனிமையில் உட்கார்ந்து ஆழ்ந்த சிந்தனையில் இருக்கிறார்களா என்பதை அறியவும். கூடிய வரை தனிமையில் இருப்பதை அனுமதிக்க வேண்டாம்.
பெண் குழந்தைகளாக இருப்பின் அவர்கள் உற்சாகமாக - மகிழ்ச்சியாக இருக்கிறார்களா என அறியவும். என்னதான் நெருங்கிய நண்பர்கள் - குடும்ப நண்பர்கள் என்றாலும், இந்த வயதுடைய பெண் குழந்தைகளை அவர்கள் பாதுகாப்பில் விட்டு வெளியில் செல்லாதீர்கள்.
முடிந்தால் உடன் அழைத்துச் செல்லுங்கள். அல்லது அவர்களை தனியாகவே செயல்பட அனுமதியுங்கள். இப்படிச் செய்வதால், அவர்களுக்கும் பொறுப்புணர்ச்சி அதிகரித்து, படிப்பு மற்றும் வேலைகளில் ஆர்வம் காட்டத் தொடங்கி விடுவார்கள்.
எனவ மனோநிலை முதிர்ச்சி என்பது பதினென் பருவத்தில் மிகமிக குறிப்பிடத்தக்கது என்பதை அறிந்து செயலாற்றுங்கள்.