Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உடலுக்கு புத்துணர்ச்சி தரும் இளநீர்!

Webdunia
ஞாயிறு, 1 மே 2022 (00:00 IST)
உடல் சூடு அதிகமாவதால் உடலில் உள்ள நீர் சுண்டிப்போய், சிறுநீர் கழிக்க சிலர் சிரமப்படுவர். இப்பருவத்தில்தான் சிறுநீர்  தொற்றுநோய்களும் அதிகம் பரவுகிறது. இவர்கள் இளநீரைப் பருக சிறுநீர் தாராளமாகப் பிரியும். வளரும் குழந்தைகளுக்கும், வயதானவர்களுக்கும் இளநீர் சிறந்த டானிக்.
 
காலரா, வயிற்றுப் போக்கினால் அவதிப்படுவோர்க்கு, அவசர காலங்களில் ஊசி மூலம் இரத்தத்தில் கலக்க ‘டிரிப்ஸ்’ போல்  ஏற்றப்படுகிறது. இதில் உள்ள தாதுப் பொருட்கள் உடலில் விரைந்து சென்று கலந்து, மயக்கமுற்ற நிலையில் இருப்போர்க்கு  உயிர் தரும் மருந்தாகிறது. 
 
நிறைய மருந்து, மாத்திரைகள் சாப்பிட நேரும்போது, கூட இளநீர் சாப்பிட்டால் உடலில் மருந்தின் தாக்கத்தை குறைக்க  பெரிதும் உதவுகிறது. இளநீரில் உள்ள சத்துக்கள் இளநீரிலேயே, இளசாக உள்ள காய்களின் நீர் அதிக இனிப்பு சுவையுடனும்,  முற்றின காய்கள் இனிப்பு குறைவாக இருப்பதையும் காணலாம். 
 
இளநீரில் சோடியம், பொட்டாசியம், கால்சியம், மக்னீசியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து என தாதுப்பொருட்கள் கணக்கிலடங்காது  அடங்கியுள்ளது.
 
தவிர இளநீரில் வைட்டமின்களும், அமினோ அமிலங்களும் உள்ளன. தாதுப் பொருட்கள், குறிப்பாகப் பொட்டாசியம் அதிக  அளவில் இருப்பதால் சிறுநீரகப் பாதிப்படைந்தவர்கள் இளநீரைப் பருகக் கூடாது. 
 
நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்களும் அதிக அளவில் அல்லது தினமும் இளநீர் பருகக்கூடாது. முற்றின தேய்காயில்  உள்ள இளநீரே இவர்கள் பருக உகந்தது. 
 
வெப்பம் அதிகமாகும்போது சருமத்தில் ஏற்படும் வியர்குரு போன்றவற்றின் மீது தடவவும் நல்ல மருந்தாகும். முகத்தின் சரும  பாதுகாப்பிற்கும் இளநீர் தடவிக் கொள்வது நல்லது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தினமும் 10 மணி நேரத்திற்கும் மேல் ஒரே நேரத்தில் உட்கார்ந்திருந்தால் வரும் ஆபத்து..!

காலையில் உலர் பழங்களை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் தெரியுமா?

சளி பிடிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

மார்பக புற்றுநோய் வருமுன் காக்க என்ன செய்ய வேண்டும்?

உடற்பயிற்சி செய்தாலும் மாரடைப்பு வரும்.. காரணம் இதுதான்..!

அடுத்த கட்டுரையில்
Show comments