Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கத்திரிக்காயில் உள்ள வைட்டமின்களும் கிடைக்கும் நன்மைகளும் !!

Webdunia
சனி, 30 ஏப்ரல் 2022 (17:44 IST)
கத்திரிக்காயை உணவில் சேர்த்துக் கொள்ளும் பொழுது கல்லீரலின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. எனவே கல்லீரல் சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படாமல் தவிர்க்கலாம்.


கத்திரிக்காயில் கொலஸ்ட்ரால் இல்லை, கொழுப்பு இல்லை மற்றும் கலோரிகள் மிகக் குறைவு. நார்ச்சத்து நிறைந்த கத்தரிக்காயை உட்கொள்வது கிரெலின் என்ற ஹார்மோனை வெளியிடுவதைத் தடுக்கிறது.

கத்திரிக்காய் அதிகமாக உணவில் சேர்த்து வரும் பொழுது இதய தசைகள் வலுப்பெற்று, இரத்த ஓட்டமானது இதயத்திற்கு சீராக செல்கிறது.

கத்தரிக்காயில் வைட்டமின் பி 6, வைட்டமின் சி, பொட்டாசியம் மற்றும் பைட்டோநியூட்ரியண்ட் உள்ளன, இதனால் ஒட்டுமொத்த இதய ஆரோக்கியத்திற்கும் நல்லது.

எலும்புகள் மற்றும் பற்கள் உருவாவதற்கு  தேவையான கால்சியம் உள்ளன. கத்தரிக்காயில் கொழுப்பு  மிகக் குறைவாக உள்ளது. ஆனால்  நார்ச்சத்து அதிகம் இருக்கிறது. கத்தரிக்காயில் உள்ள நார்ச்சத்து இரைப்பை சாறுகளின் சுரப்பைத் தூண்டுகிறது, இது நம் உடலுக்கு உணவை எளிதில் ஜீரணிக்க உதவுகிறது மற்றும் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சவும் உதவுகிறது.

வறுத்த கத்தரிக்காய் சுவை நன்றாக இருக்கும் ஆனால் அவை நிறைய எண்ணெய்யை உறிஞ்சிவிடும். எனவே வேகவைத்த கத்தரிக்காயை உட்கொள்வது பயன் தரும்.

கத்தரிக்காயை குறைவான அளவில் எடுத்து கொள்வது நல்லது. ஒவ்வாமை (அலர்ஜி) உள்ளவர்கள் கத்திரிக்காயை தவிர்க்க வேண்டும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நினைவாற்றல் குறைபாடு ஏற்பட என்னென்ன காரணங்கள்?

உடலில் இருக்கும் நல்ல கொழுப்பு, கெட்ட கொழுப்பு.. இரண்டின் வேலைகள் என்ன?

தூக்கம் வரவில்லை என்றால் தூக்க மாத்திரை வேண்டாம்.. இதோ இயற்கையான சில பொருட்கள்..!

முகம் பளிச்சென மாற வேண்டுமா? கடுக்காய் பொடி ஒன்று இருந்தால் போதும்..!

கோதுமை மாவு ஒன்று போதும் சருமம் மென்மையாக.. ஆச்சரிய தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments