Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மனநிலைக்கும், புவிஈர்ப்பு விசைக்குமானத் தொடர்பு

மனநிலைக்கும், புவிஈர்ப்பு விசைக்குமானத் தொடர்பு
, செவ்வாய், 29 ஏப்ரல் 2008 (11:10 IST)
புவிஈர்ப்பு விசையில் ஏற்படும் மாற்றம், மனிதனின் மனநிலையில் பெருமளவு மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

குறிப்பாக மனிதர்கள் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத் தூண்டலுக்கு புவிஈர்ப்பு விசை பெரிதும் காரணமாக அமைகிறது என்று கூறுகிறார்கள் அந்த விஞ்ஞானிகள்.

ரஷ்யாவின் புவியியல் பிரச்சினைகள் குறித்து ஆய்வு நடத்தி வரும் மையத்தைச் சேர்ந்த விஞ்ஞானி ஒலேக் ஷமிலோவ் நடத்திய ஆய்வில், கடந்த 1948 முதல் 1997ஆம் ஆண்டு வரையில் மூன்று பருவநிலை மாற்றங்கள் (மார்ச்- மே, ஜூலை, அக்டோபர்) ஏற்பட்டுள்ளதைக் கண்டறிந்தார்.

அந்த சமயங்களில் வடக்கு ரஷ்ய நகரான கிரோவ்ஸ்க் பகுதியில் தற்கொலைகள் அதிகமாக நிகழ்ந்துள்ளதையும் அவர் ஆராய்ந்துள்ளார்.

இதேப்போன்று பல்வேறு ஆய்வுகளும், புவியியல் மாற்றத்திற்கும், மனித நலத்திற்கும் தொடர்பிருப்பதை உறுதி செய்துள்ளன.

ஐரோப்பிய புவி ஆய்வுக் கழகத்தின் தலைவரான மைக்கேல் ரைகிராப்ட் என்பவர் 2006ஆம் ஆண்டு நடத்திய ஆய்வில், புவியியல் மாற்றங்கள் மனித உடல் மற்றும் மன அளவில் மாற்றங்களை ஏற்படுத்தும் சாத்தியக் கூறுகள் இருப்பதாகத் தெரிவித்தார்.

மொத்தமுள்ள மக்கள் தொகையில் 10 முதல் 15 விழுக்காட்டினரை இந்த புவியியல் மாற்றம் பாதிக்கிறது என்றும் அவர் தனது ஆய்வில் கூறியுள்ளார்.

ஆஸ்ட்ரேலியாவில் 2006ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்விலும், புவியியல் மாற்றங்களின் போது அதிகளவில் தற்கொலைகள் நடப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

இதையெல்லாம் மிஞ்சும் விதத்தில் தென்ஆப்ரிக்காவில் கடந்த 13 ஆண்டுகளாக நடத்தப்பட்ட ஓர் ஆய்வு முடிவும் இதையே எடுத்துரைக்கிறது.

1994ஆம் ஆண்டில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவான போது 36.2 விழுக்காடு அளவிற்கு ஆண்கள் மன அழுத்தம் ஏற்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும், புவிநிலையில் ஏற்படும் மாற்றத்திற்கும், தற்கொலைகளுக்கும் இடையே உள்ள தொடர்பு பற்றி மேலும் ஆய்வுகள் நடந்து வருவதாக மைக்கேல் ரைகிராப·ட் கூறினார்.

கொலம்பியா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கெல்லி போஸ்நர் இதுபற்றி கூறுகையில், நமது உடலின் இயங்குத் தன்மை சுற்றுச்சூழலை அடிப்படையாகக் கொண்டு அமைகிறது. சுற்றுச்சூழல் என்று எடுத்துக் கொண்டால் அதில் புவியியலும் ஒன்றாக உள்ளது.

எனவே புவியியலில் மாற்றங்கள் தோன்றுகின்ற போது உடல் இயங்குத் தன்மையிலும் சில மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. உடல் இயங்குத் தன்மையில் ஏற்படும் மாற்றம் மன நிலையை பாதித்து, தற்கொலைக்குத் தூண்டும் அளவிற்கு மன அழுத்தத்தைக் கொடுக்கிறது என்று கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil