Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நோயின்றி வாழ வேண்டுமா?

நோயின்றி வாழ வேண்டுமா?
, புதன், 27 ஆகஸ்ட் 2008 (17:34 IST)
நாம் ஒவ்வொரு வயதிலும், ஒவ்வொரு மாதிரியான மனமுதிர்ச்சியை அடைகிறோம்.

ஒரு வயதாகும் குழந்தை நடை பழகும். மழலைப் பேச்சுடன் புதிய புதிய வார்த்தைகளை கற்றுக் கொண்டு பேசும். குழந்தைகளாக இருக்கும்வரை அவர்களுக்குத் தேவைப்படுவது பொம்மைகள், விளையாட்டு,அம்மாவின் அன்பு, தூக்கம் இவை மட்டுமே.

பள்ளிக்குச் செல்லும் வயதில் மற்ற குழந்தைகளுடன் விளையாடுவது, சிறிது நேரம் படிப்பு, ஆசிரியைகளின் கண்டிப்பு இவைதான் அந்த வயதுடைய குழந்தைகளின் மனதில் ஓடும் நினைவுகளாக இருக்கும்.

ஒவ்வொரு வயதிலும், அந்தந்த வயதிற்கேற்ப, நாம் வாழும் சூழ்நிலைக்கேற்ப மனமுதிர்ச்சி ஏற்படுகிறது.

குறிப்பிட்ட வயதில் பொதுத்தேர்வு டென்ஷன் ஏற்படும். அதாவது பத்தாம் வகுப்பு என்றால், சுமார் 15 வயதுடைய மாணவனோ அல்லது மாணவியோ தேர்வை எண்ணியே அன்றாடம் பள்ளி செல்வார்கள். சிலர் தேவையற்ற பயத்துடனேயே தேர்வை எதிர்நோக்கியிருப்பார்கள்.

இன்னும் சொல்லப்போனால் ஒருசில பள்ளிகளில் 9ஆம் வகுப்பு தொடக்கத்தில் இருந்தே பத்தாம் வகுப்புத் தேர்வுக்கு ஆயத்தமாகத் தொடங்கி விடுகிறார்கள்.

மனதளவில் தேர்வு குறித்த ஒரு டென்ஷனை ஏற்படுத்தி விடுவதும் உண்டு.

பொதுத்தேர்வுகள் முடிந்து ரிசல்ட் வந்தால், எதிர்பார்த்த மதிப்பெண்கள் கிடைக்காமல் போகும் நிலையில், மாணவர்களுடன் சேர்ந்து பெற்றோரும் மனபாதிப்பை அடைகிறார்கள்.

வேறு சிலரோ, படித்து முடித்த பின் தங்கள் தகுதிக்கும், திறமைக்கும் உரிய வேலை கிடைக்கவில்லை என்று மனம் வருந்துகிறார்கள்.

எனவே மன பாதிப்பு என்பது, வயதிற்கு ஏற்றாற்போல் வேறுபடுகிறது. மனதளவிலான பாதிப்பே பல்வேறு நோய்களுக்கும் காரணமாகிறது. எனவே எது நடந்தாலும், எவ்வளவு மதிப்பெண் பெற்றாலும் கலங்காமல் இருக்கப் பழகிக் கொள்ளுங்கள். அதுவே நம் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

பெரும்பாலான நோய்களுக்குக் காரணமாக அமைவது மனச் சோர்வே என ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

அதிகளவிலான எதிர்பார்ப்பு இருந்து விட்டு, அது இயலாமல் போகும்போது ஏற்படும் ஏமாற்றத்தை சிலரால் ஏற்க முடிவதில்லை. இதுவே மனநோயைக் கொண்டு வந்து விடுகிறது.

ரஜினிகாந்தின் `முத்து' திரைப்படத்தில் வரும் வசனமே நம் நினைவுக்கு வருகிறது. `கிடைக்கிறது கிடைக்காம இருக்காது; கிடைக்காதது கடைசிவரை கிடைக்காது' என்பதே அது. இந்த டயலாக் மனச் சோர்வை குறைப்பதற்கும் பொருந்தும்.

எனவே மனச் சோர்வை தவிருங்கள். நோயகளில் இருந்து விடுபடுங்கள்!

Share this Story:

Follow Webdunia tamil